சேலத்தில் கழகப்பொறுப்பாளர்களின் முயற்சியால் தந்தைபெரியார் சிலையின் மறைப்பு அகற்றம்

சேலம்,மார்ச் 21 சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி சமத்துவப்புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை துணி போட்டு மூடி இருந்ததுகாவல் துறையினரிடம் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்காடி வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை சுட்டிக் காட்டியபின்னர்  17.03.2021 அன்று தந்தைபெரியார் சிலை மறைப்பு அகற்றப் பட்டது. உயர் அதிகாரியிடம் கலந்து பேசி இரும்பு கூண்டையும் எடுத்து விடுவதாக காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன், மாவட்ட தலைவர் .கிருட்டிணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பி னர்கள் பூசாரிப்பட்டி ஜெயபால், ஓமலூர் பெ.சவுந்தி ரராசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எடுத்த முயற்சியைத் தொடர்ந்து தந்தைபெரியார் சிலையை மூடியிருந்த மறைப்பு அகற்றப்பட்டது.

Comments