இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை

லண்டன், மார்ச் 17- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்து குடி யரசு தின விழாவில் சிறப்பு. விருந் தினராக பங்கேற்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இங்கிலாந்தில் கரோனா நோய் தொற்று மீண்டும் வேகமாக பரவியதால் போரிஸ் ஜான்சன் இந்திய பயணத்தை ரத்து செய்தார். இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் இந்தியாவுக்கு வருகிறார். இதை அவரது அலு வலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

அய்ரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் பயணம் இது. இங்கிலாந்து தனது வர்த்தக தொடர்புகளை ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடன் விரிவு படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், மெக்சிகோ, வியட்நாம் உள்ளிட்ட 11 பசிபிக் ரிம் நாடுகளை பிரதிநிதித்துவப்படும் டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மையில் சேர இங்கிலாந்து கடந்த மாதம் விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளை மேற் கொண்டது. மேலும் ஆசியான் கூட்டமைப்பில் ஆலோசகராக சேரவும் விண்ணப்பித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் புழுதிப்புயல்

பெய்ஜிங், மார்ச் 17- சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் புழுதிப் புயல் வீசியது. இதனால் தலைநகர் முழுவதிலும் உள்ள அடுக்குமாடி கட்டடங்களில் புழுதி படித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அள வுக்கு பெய்ஜிங் நகரில் மோசமான புழுதிப் புயல் தாக்கியுள்ளது.

இதன் காரணமாக பெய்ஜிங்கிலுள்ள இரண்டு விமான நிலையங்களில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு பாலைவனங்களில் இருந்து மணல் கிழக்கு நோக்கி வீசும் என்பதால் வசந்த காலங்களில் இதுபோன்ற புயல்கள் வழக்கமாக ஏற்படும்.

புழுதிப் புயல்கள் ஏற்படுவதைத் தடுக்க சீனா நகரம் முழுவதும் அந்நாட்டு அரசு மரங்களை நட்டு வருகிறது. இருப்பினும், நகர் விரிவாக்கம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயலைச் சீனாவால் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள புழுதிப் புயல் 12 மாகாணங்களைப் பாதிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட புழுதிப் புயலில் இது மோசமானது என சீனா வானிலை ஆய்வு மய்யம் தெரி வித்துள்ளது.

ஏற்கெனவே பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தற்போது புழுதிப் புயலும் ஏற் பட்டுள்ளதால் காற்றின் தரம் மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Comments