திருநரையூரில் "திராவிடம் வெல்லும்" தெருமுனைக் கூட்டம்

குடந்தை, மார்ச் 30- குடந்தை கழக மாவட் டம், திருவிடைமருதூர் ஒன்றியம் திரு நரையூர் கிளைக் கழகம் சார்பில் திரு விடைமருதூர் சட்டமன்ற வேட்பாளர் கோவி.செழியன் அவர்களை ஆதரித்து  திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச் சாரக் கூட்டம் 27.3.2021, சனிக்கிழமை, மாலை 6.00 மணியளவில் திருநரையூர் கடைவீதியில்  குடந்தை பெருநகர செய லாளர்  பீ.இரமேஷ் தலைமையில் திரு விடைமருதூர் ஒன்றிய தலைவர் எம். என்.கணேசன் முன்னிலையில் எழுச்சி யுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மண்டலச் செயலாளர் .குருசாமி பொதுக்குழு உறுப்பினர், சு.விஜயகுமார், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் மு.திரிபுரசுந்தரி,    திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் .சிவக்குமார், குடந்தை ஒன்றிய தலைவர் .ஜில்ராஜ், சோழபுரம் நகர செயலாளர் மதியழகன், பவுண்டரீகபுரம் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர் வே.குண சேகரன் வரவேற்றும் திருவிடைமருதூர் (தெ) ஒன்றிய செயலாளர் .சங்கர் நன்றி கூறியும் உரையாற்றினர்.

Comments