நம் இனமானப் பேராசிரியர்தத்துவமாக என்றும்நமக்குப் பாடம் எடுப்பவரே!

திராவிடர் இயக்கத்தையும், தந்தை பெரியாரின் லட்சியங்களையும், அறிஞர் அண்ணா, கலைஞர் கண்ட களங்களையும் தனது வாழ்வாக மதித்து, அதன்படி ஒழுகிய - உடலால் மறைந்தும், உணர்வால் நிறைந்த நம் இனமானப் பேராசிரியர் மானமிகு .அன்பழகன் அவர்களது முதலாண்டு நினைவு நாள் இன்று! (7.3.2021)

பெரியாரின் கொள்கை முழக்கமாக இறுதி வரை திகழ்ந்த நம் இனமானப் பேராசிரியர் தத்துவ ஞானியாகி, நமக்கு வழிகாட்டியாக என்றும் திகழ்கிறார்!

பேராசிரியரின் பாடங்களே நமக்குப் பாதைகள் - பதாகைகள் - மறவோம்.

திராவிடம் வெல்லும்" என்பதே அவருக்கு இப்போதும் நாம் வைக்கும் மலர் வளையம்!

 கீ.விரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை             

7.3.2021  


Comments