உலக உழைக்கும் மகளிர் நாளில் தந்தை பெரியாரின் நூல்கள் வழங்கல்


 நாட்டறம்பள்ளி, மார்ச்  20 திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம் பள்ளியில் வசந்தி நினைவு நாட்டுப்புற கலைப்பள்ளியின் சார்பாக உலக மகளிர் நாள் (8.3.2021) அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்த அறக்கட்டளையின் செயலாளர் பொ.வளர்மதி தலைமை தாங்கினார். கலையரசி சூரியா அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேளாளர் பி.சுஜிதாசிறீராம், இலட்சுமி சிவசங்கரன், திருவாசுகி, செந்தமிழ்முருகன், கு.கு.மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.   விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் தந்தை பெரியாரின்பெண் ஏன் அடிமையானாள்”, “திராவிடம் வெல்லும்“, உள்ளிட்ட நூல்கள் வழங்கப் பட்டன.

ஒசூர் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ஒசூர், மார்ச் 20 ஒசூர் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ் அறிமுக கூட்டம் 16.3.2021 அன்று ஒசூர் மீரா மஹால் திருமணமண்டபத்தில் ஒசூர் நகர திமுக பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்..சத்தியா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் கலந்து கொண்டு வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து திராவிடர் கழக வெளியீடானதிமுக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்என்ற நூலை வேட்பாளர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களிடம் வழங்கி இந்நூலை ஒசூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டு திமுக,அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற மாவட்ட திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி,மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணி தலைவர் சி.மணி, செயலாளர் தி.பால கிருஷ்ணன், மகளிரணி அமைப்பாளர் பா.கண்மணி, ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ், இளைஞரணி துணைச் செயலாளர் ஹரிஸ் மற்றும் மனித நேய மக்கள் கட்சி, கொங்கு கட்சி, காங்கிரஸ், சிபிஅய், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக்,கட்சி பொறுப்பாளர்கள் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments