தமிழர் தலைவருக்கு மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர்

நினைவு விருதினை அமெரிக்க - மராட்டிய அறக்கட்டளை வழங்கியது

மராட்டியத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த டாக்டர் நரேந் திர தபோல்கர், மதவெறியர்களால் 2013-ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் வாழும் மராட்டியர்கள் நிறுவிய மகாராட்டிரா பவுண்டேசன் தபோல்கர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நினைவு விருதினை வழங்கி வருகிறது. டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவிலான இந்த ஆண்டு (2021) விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைத் தெரிவு செய்த செய்தியை கடந்த டிசம்பர் மாதத்தில் மகாராட்டிரா பவுண்டேசன் அறிவித்தது.

விருது

டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது - விருது பட்டயமும், ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் கொண்டது.

விருது வழங்கிய நிகழ்ச்சி

கடந்த வாரம் 6.3.2021 அன்று இணைய வழியாக டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை தமிழர் தலைவருக்கு வழங்கினர். மும்பாய் மாநகரத் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழர் தலைவர் சார்பாக விருதினை பெற்றுக் கொண்டனர். மும்பை திராவிடர் கழகத் தலைவர் கணேசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன் முதலியோர் பெற்றுக் கொண்ட விருதினை மும்பாய் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன் சென்னைக்கு வந்து தமிழர் தலைவரைச் சந்தித்து விருதுபட்டயத்தை நேரில் அளித்தார்.

விருது தொகையான ரூபாய் ஒரு லட்சத்தை தமிழர் தலைவர் மூடநம்பிக்கை ஒழிப்பு அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கினார்

தனக்கு வழங்கப்பட்ட விருது பண முடிப்பான ரூபாய் ஒரு லட்சத்தை மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிக்கு, டாக்டர் நரேந்திர தபோல்கரால் நிறுவப்பட்ட மகாராட்டிரா அந் தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி அமைப்பிற்கே நன்கொடை யாக வழங்குவதாக விருது வழங்கிய நிகழ்ச்சியிலே தமிழர் தலைவர் அறிவித்தார்.

காணொலி மூலம் ஏற்புரை வழங்கிய திராவிடர் கழகத் தலைவர், இந்த விருது தனிப்பட்ட எனக்கு அளிக்கப் பட்டதாக நான் கருதவில்லை. மாறாக எங்கள் இயக்கத் திற்கும் இயக்கத் தோழர்களுக்கும் அளிக்கப்பட்டதாகவே கருதுகிறோம் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

விருதினை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா மேடையில், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பலத்த கர வொலிக்கிடையே கழகத் தலைவரிடம் ஒப்படைத்தார்

விருதினை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா மேடையில், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பலத்த கர வொலிக்கிடையே கழகத் தலைவரிடம் ஒப்படைத்தார்.

Comments