பா.ஜ.க. - அண்ணா திமுக கூட்டணி ஒழிக்கப்பட வேண்டியது - எந்த அடிப்படையில்?

13.3.2021 சனியன்று கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக் குழு நடைபெற்றது. ஏற்பாடுகள் அனைத்தும் நேர்த்தியாக அமைந்திருந்தன.

இயக்க வரலாற்றில் வரலாறு படைத்துள்ள குடந்தையின்  மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல் என்று சொல்லும் அளவுக்கு அனைத்தும் அமைந்திருந்தன.

ஒருங்கிணைப்பாளர் - பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் - மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் கு. நிம்மதி உட்பட, அயராது பாடுபட்ட அத்தனைப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் பாராட்டுகள்.

பொதுக் குழுவிலும் சரி, தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்திலும் சரி, கழகத் தலைவர் கூறிய கருத்துகளும், விளக்க உரையும் மிகவும் முக்கியமானவையாகும்.

மே மாதத்தில் தமிழ்நாட்டின் முக்கிய மண்டலங்களில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை என்ற அறிவிப்பும், 'விடுதலை'யைப் பரப்புதல், 'பெரியார் உலகம்' - அதற்கான நன்கொடை திரட்டல் இவையெல்லாம் அந்த உரையில் முக்கிய அம்சங்களாக மின்னின.

1) தேர்தலில் திராவிடர் கழகம் போட்டியிடாத சமூக அமைப்புதான் என்றாலும், நாட்டின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் அதுவும் ஒரு களமே.

(2) சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனு தத்துவம் நீண்ட காலமாகவே இருந்து வருவதுதான் நம் அரசர்கள்கூட சமஸ்கிருதக் கல்விக்குத்தான் நிலங்களையும், மானியங்களையும் அள்ளிக் கொடுத்து வந்துள்ளனர்.

அந்த வகையில் திராவிட இயக்கம் 'சூத்திர' 'பஞ்சம' மக்களுக்கான கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வந்துள்ளது.

ஆச்சாரியார் (ராஜாஜி) இரு முறை ஆட்சி அதிகரத்திற்கு வந்த நிலையில் நம் மக்களின் கல்வி வளர்ச்சியைத் தடுத்துள்ளார். 1952இல் முதல் அமைச்சரான பிறகு 6000 பள்ளிகளை இழுத்து மூடியதோடு, அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலை செய்ய வேண்டும் என்ற வர்ணாசிரம குலக்கல்வித் திட்டத்தைத் திணித்தார்.

தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு பொங்கி எழுந்த நிலையில், அதிகாரப் பீடத்திலிருந்து அவர் விரட்டப்பட்டார்.

(3) முதல் அமைச்சராக காமராசர் கொண்டு வரப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்; கல்வி நீரோடை எங்கும் பாயுமாறு செய்தவர் கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசர் ஆவார்.

நம் மக்களுக்கான கல்விக்கு அடிக்கல் நாட்டியது திராவிட இயக்கமான நீதிக்கட்சியே - அதனைத் தொடர்ந்தவர் காமராசர்.

இப்பொழுது மத்தியில் பா... ஆட்சி அதிகாரத்துக்கு வந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் குலக்கல்விக் திட்டம் நுழைகிறது.

ஒரு கால கட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் கல்லூரிகள் இருந்தன. இரண்டொரு பல்கலைக் கழகங்களும் இருந்தன.

திராவிட இயக்க ஆட்சியில் எங்குப் பார்த்தாலும் கல்லூரிகள், மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் பளிச்சிடுகின்றன.

தலைமுறை, தலைமுறையாகக் கல்விக் கண் அவிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விக் கண் பெற்றனர் - தலை நிமிர்ந்து எழுந்தனர். அதனை ஒழித்துத் தரைமாட்டமாக்கும் நோக்கத்தைக் கொண்டதுதான் பா... அந்தப் பா...வுக்குத் துணை போவது அண்ணா தி.மு..,

(4) 'நீட்' என்ற நுழைவுத் தேர்வு மீண்டும் நம் மக்களைத் தலை எடுக்காமல் செய்வதற்குத்தான்; கிராமப்புற மக்கள்கூட மருத்துவர்களாக அதிக எண்ணிக்கையில் வளர்ந்து வருவதைப் பொறுக்க முடியாமல் அதனை வீழ்த்தும் சதித் திட்டம் தான் 'நீட்'.

கேட்டால் ஊழலை ஒழிக்கத்தான் 'நீட்' என்கிறார்கள். அதாவது உண்மையா? நீட்டில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிடவில்லையா? 'நீட்' கேள்வித்தாள் கசியவில்லையா?

தேர்வு நடத்தும் அதிகாரம் பல்கலைக் கழகத்துக்கே தவிர பல்கலைக் கழக மான்யக் குழுவுக்கு  அந்த அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றமே கூறிடவில்லையா?

மத்திய கல்வி திட்டத்தின் அடிப்படையில் 'நீட்' தேர்வு உள்ளதால் மாநிலக் கல்வி திட்டத்தில் பயின்றவர்களால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. அதன் விளைவு மருத்துவக் கனவு நிறைவேறாத நிலையில் இருபால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை - பரிதாபம்!

(5) மத்திய உயர்ஜாதி பா... அரசுதான் இப்படி நடந்து கொள்கிறது என்றால் அதற்குத் துணை போவது அண்ணா பெயரில் உள்ள அண்ணா திமுக.

அனைத்துக் கட்சிகளின் அழுத்தத்தால் இரு மசோதாக்களை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றியதே தவிர, மத்திய அரசின் அனுமதியைப் பெறும் திராணி இல்லை அதிமுக அரசுக்கு.

7) போதும் போதாததற்கு பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து செயல்படுத்தி விட்டது மத்திய பா... அரசு.

பெயரளவுக்கு எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டதே தவிர - கடுமையாக தன் எதிர்ப்புக் குரலைக் கொடுக்கவில்லை.

அதிமுக அரசு நினைத்திருந்தால் குடியரசுத் தலைவரின் தேர்தலின் போது - 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை வைத்திருக்கலாம்.

மடியில் கனம் இருப்பதால் அப்படியெல்லாம் நடந்து கொள்ளும் நிலையில் அதிமுக இல்லை.

இந்த வகையில் சமூகநீதிக்கு மறுக்கப்பட்டுள்ள ஆபத்தினை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறி விளக்கினார்.

நடக்க இருக்கும் தேர்தலில் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்!

ஆச்சாரியார் ஆட்சி ஒழிக்கப்பட்டதும் சமூகநீதி அடிப்படையில்தான்! அண்ணா தி.மு.. - பா... ஒழிக்கப்பட வேண்டியதும் இந்த அடிப்படையில்தான் - நினைவு இருக்கட்டும்!

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image