தோக்கியம் கென்னடி இறுதி நிகழ்வு!

திருப்பத்தூர், மார்ச் 2- திருப் பத்தூர் மாவட்டம் தோக்கி யம் கென்னடி அவர்கள் 27.2.2021 மாலை மறை வுற்றார். செய்தி தெரிந்தவுடன் மாவட்ட தலைவர் கே சி எழிலரசன் அவர்கள் தலை மையில் கழக தோழர்கள் நேரில் சென்று பிள்ளைக ளுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அடுத்த நாள் 28.2.2021 அன்று எவ்வித மூடசடங்கு களும் இன்றி அடக்கம் செய் யப்பட்டது.

மாவட்ட தலைவர் தலைமையில் கழக தோழர்கள் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத் தும் மாலை அணிவித்தும் கழக கொடிபோர்த்தியும் இறுதி மரியாதை செய்தனர்.

கிருட்டினகிரி மாவட்ட தலைவர் . அறிவரசன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ இணைந்து மலர் வளையம் வைத்தனர். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் எம்.என். அன்பழகன் மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் இணைந்து மாலை அணிவித் தனர்.

மாநில அமைப்புச் செய லாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் கே.சி.எழி லரசன் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர்

சி.தமிழ்செல்வன் இணைந்து கழக கொடி போர்த்தினர். தொடர்ந்து இரங்கல் கூட் டம் நடைப்பெற்றது. கழக தோழரும் கென்னடி அவர் களின் உற்ற நண்பருமான பச்சியப்பன், சாந்தசீலன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா சரவணன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

நீண்ட நாளைய கழக தொண்டர், சிறந்த கொள் கைப் பாடகர், கழகம் அறிவித்து நடத்திய அத்துணை போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். சுயமரியாதை சுடரொளி கே.கே.சி. கொள்கை குடும்பத் தோடு நெருக்கமாக இருந்து கழக பணியாற்றிய அன்னா ருக்கு வீரவணக்கம் செலுத் தப்பட்டது.

நிகழ்வில் மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் சி..சிற்றரசன், தருமபுரி மண் டல இளைஞரணி செயலா ளர் வண்டி ஆறுமுகம், பகுத் தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் .வெங்கடேசன், ஆம்பூர் வெற்றிகொண்டான், சோலையார்பேட்டை இராசேந்திரன், பல்லவன் நகர் பெருமாள், கண்ணாலப் பட்டி தசரதன், பெரியகரம் கனகராஜ், திருப்பத்தூர் பன்னீர், பெரியார் செல்வன், தோழர் காளிதாஸ், மத்தூர் கி. முருகேசன், இளைஞரணி தே.பழனிசாமி, அக்ரி அர விந்த், தோக்கியம் சந்தோஷ், இளையராசா உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், உறு வினர்கள் என பலர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். கழக தலைவர் தமிழர் தலைவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு "உயரமான கரிய நிறத்துடன் கழக பாடலை பாடும் தோழர் கென்னடி" என குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித் தார் என்பது குறிப்பிடதக்கது.

Comments