பா.ஜ.வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: முதல்வர் மம்தா

ஜால்டா, மார்ச் 17- ‘எந்த சதித் திட்டங்களும் என்னை தடுக்க முடியாதுஎன முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடந்த வாரம் நந்திகிராமில் பிரச் £ ரத்தில் ஈடுபட்டு இருந்த போது காயம் ஏற்பட்டது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பி னார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் காலில் கட்டுடன் வீல்சேரில் அமர்ந்தபடியே பிரச்சா ரத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். புருலியா மாவட் டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா நேற்று சக்கர நாற்காலியில் அமர்ந்த படி பங்கேற்று பேசியதாவது:

இன்னும் சிறிது நாட்கள் காத்திருங்கள். எனது கால்கள் குணமடைந்துவிடும். வங்க மண்ணில் உங்களது கால்கள் சுதந்திரமாக நடந்து செல் வதை நான் பார்ப்பேன். சதி  திட்டம் தான் என்னை காயப் படுத்தியது. டில்லியிலிருந்து பல தலைவர்களோடு பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இங்கு வந்துள்ளது. உங்களால் வங் கத்தை பெற முடியாது. திரிணாமுல் அரசானது கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட  பணிகளை செய்துள்ளது. உலகில் வேறு எந்த அரசாலும் இதுபோன்ற பணிகளை செய்திருக்க முடியாது. பாஜ கவால் பரிந்துரை செய்யப் பட்ட 18 நாடாளுமன்ற உறுப் பினர்கள் மாநிலத்துக்காக எது வும் செய்யவில்லை. அவர்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வார்கள்?  பொய் மற்றும் கலவரத்தை பரப்பு வார்களா? சில பாஜக தலைவர்கள் ரதத் தில் சுற்றி வரு கிறார்கள். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

Comments