மதுரவாயலில் ‘திராவிடம் வெல்லும்' கூட்டம்

சென்னை, மார்ச்  10- மதுரவா யலில் நடைபெற்ற தெரு முனைக் கூட்டத்தில் தஞ்சை பெரியார் செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆவடி மாவட்டம் மதுர வாயல் பகுதியில் கடந்த 18.-2.-2021, வியாழன் மாலை 6 மணிக்கு பகுதிக்கழகத்தின் சார் பில் மதுர வாயல் மின்சார அலுவலகத்தின் அருகில் தெரு முனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.

நிகழ்ச்சியில் .பாலமுரளி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பகுதிக் கழகத்தின் தலைவர் சு.வேல்சாமி தலை மையில் மாவட்டத் தலைவர் பா.தென் னரசு, செயலாளர் .இளவரசு, அமைப்பாளர் உடுமலை வடிவேல் ஆகி யோர் முன்னிலையில், மாநில அமைப்புச் செயலாளர்

வி. பன்னீர் செல்வம் தொடக்க வுரை ஆற்றினார். கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் அண்ணா நிசார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், பூவைப் பகுதித் தலைவர் பெரியார் மாணாக்கன், செ.பெ.தொண் டறம், மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், புழல் இராசேந் திரன், ராஜீவ் காந்தி நகர் முருகேசன், ஆவடி தமிழ்மணி, அரும் பாக்கம்

சா.தாமோதரன், சஞ்சய், பெரி யார் வலைக்காட்சி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்ட னர். கூட்டம் முடியும் வரையி லும்  சாலையின் இருபுறங்களி லும் மக்கள் நின்று கவனித்து பயன்பெற்றனர்.

Comments