பெண்களே உங்கள் வாக்கு யாருக்கு?

*இந்தியாவிலேயே முதல் முதலாக பரம் பரைச் சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு உரிமை அளிக்கும் சொத்துரிமைச் சட்டத்தை 1989-இல் முதல்வர் கலைஞர் கொண்டு வந்தார். 1928இல் தென்னிந்திய சீர்திருத்தக் கார்கள் மாநாட்டிலும் (தந்தை பெரியார் தலைமை) 1929செங்கல்பட்டு முதல் சுய மரியாதை மாநில மாநாட்டிலும்  நிறைவேற்றப் பட்ட தீர்மானம் இது.

* பெண்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் 8ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 5000 ரூபாய் வழங்கினார். பின்னர் அது 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 10,000 ரூபாயாக உயர்த்தப் பட்டது. 2006 இல் 15,000, 2008இல் 20,000 மற்றும் 2010இல் 25,000 என படிப்படியாக உயர்த்தி கிராமப்புற பெண்கள் கல்வியால் முன்னேற வழி செய்தது மாபெரும் புரட்சி.

* டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதி உதவித் திட்டத்தை 1975-இல் தொடங்கி இளம் மகளிர் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் முதல்வர் கலைஞர்.

* அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் .

* அன்னை தெரசா நினைவாக ஆதரவற்ற பெண்களுக்கான நிதியுதவித் திட்டம்

* ஏழைப் பெண்கள் பட்டப் படிப்பை முடிக்கும் வகையில் 1989-இல் நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். பின்னர் 2008-இல் அதே திட்டத்தை முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து ஏழைப் பெண்கள் முதுகலைப்பட்டம் பெற ஆணை!

* 1973-இல் இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறையில் பெண்கள் பணி நியமனம்!

* 1975-இல் ஏழை விதவைப் பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம்

* கணவனால் கைவிடப்பட்டப் பெண் களுக்கு 18 வயது நிரம்பிய மகன் இருந்தாலும் முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்க 1998-இல் ஆணை.

 * 1998-இல் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பூ விற்கும் மகளிர், காய்கறி விற்கும் மகளிர் உட்பட பல்வேறு சிறு வணிகங்களில் ஈடுபட்ட ஏழைப் பெண்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைய வழிவகை.

* 1990-இல் அரசு வேலைவாய்ப்பில் பெண் களுக்கு 30% இடஒதுக்கீடு முறை சட்டம்.

* 1997-இல் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் இரண்டாம் வகுப்புவரை பெண்கள் மட்டுமே பணி நியமனம்

*  கோவில்களில் அறங்காவலர் குழுவில் பெண் ஒருவர் கட்டாயம்.

* 1989-இல் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் ஊட்டச் சத்து உட்கொள்ளவும் அவர்களின் வருவாய்க் காகவும் 6000 ரூபாய் வழங்கும் மகப்பேறு  நிதியுதவித் திட்டம்

* 1996-இல் இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்பில் பெண் களுக்கு 33% இட ஒதுக்கீடு

 * இன்று இலட்சக்கணக்கான கிராமப்புற பெண்கள் தங்களது சொந்தக்காலில் நிற்ப தற்கு அடிப்படையாய் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம்.

* பெண்களே நிர்வகிக்கும் நியாயவிலைக் கடைகள்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் கண்டிராத செய்திடாத இந்தத் திட்டங்களை செயல் படுத்தியது தி.மு.. ஆட்சியே. உங்கள் வாக்கு யாருக்கு, உதய சூரியனுக்கு தானே!

Comments