பேட்டா கோபால் துணைவியார் மறைவு தமிழர் தலைவர் ஆறுதல்


பேட்டா கோபால் அவர்களின் துணைவியார் ஏஞ்சலின் மேரி அவர்கள் வயது 80. நேற்று (26.3.2021) காலை மறைவுற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமையில் நகர தலைவர் துரைசாமி,  மண்டலச் செயலாளர் பா.ஆல்பர்ட். பீமநகர் பகுதி தலைவர் முபாரக் அலி, கீழ வயலூர் பகுதி தலைவர் மகா மணி, திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மலர்மன்னன், ஆனந்தி மலர்மன்னன் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

Comments