அ.தி.மு.க.வின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கப் போவது பா.ஜ.க.வே!

கும்பகோணம் கழகப் பொதுக்குழுவில்  தமிழர் தலைவர் கருத்துரை

கும்பகோணம், மார்ச் 17  .தி.மு..வின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கப் போவது பா...வே  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் உரை

கடந்த 13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில்  தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதல் உரையாற்றினார்.

அவரது வழிகாட்டுதல் உரை வருமாறு:

பேரன்புமிக்க கழகக் குடும்பத்தவர்களே, என் னுடைய அரசியல் தீர்மானத்தை முன்மொழிவது என்கிற கடமை சிறப்பாக நடைபெற்று, நீங்கள் அத்தனை பேரும் ஒருமனதாக ஏற்று, நல்ல அளவிற்கு உற்சாகத்தோடு அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய மைக்காக நன்றி.

அந்தத் தீர்மானத்தை நான் படித்தேன். ஆனால், அதையொட்டிய உரை என்பது இப்பொழுதுதான்.

‘‘திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கே வாக்களிக்கவேண்டும்!  பா... - .தி.மு.. கூட்டணி தோற்கடிக்கப்படவேண்டும்- ஏன்?''

இதற்கிடையில், ‘‘திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கே வாக்களிக்கவேண்டும்!  பா... - .தி.மு.. கூட்டணி தோற்கடிக்கப்படவேண்டும் - ஏன்?'' என்ற புத்தகம் இங்கே வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை, இரண்டு, மூன்று நாள்களாக  இரவு - பகல் பாராது நம்முடைய கவிஞர் மற்றும்விடுதலை' தோழர்கள் எல்லோரும் இணைந்து அருமையாகத் தயார் செய்திருக்கிறார்கள். இன்றைக்குக் கொண்டு வருவார்களா? என்கிற சந்தேகம் எனக்கே இருந்தது.

ஒரு கருவூலம் போன்றது  இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தைப்  படித்துவிட்டார்கள் என்றால், நாம் பேசவேண்டிய அவசியமே இல்லை. எதிரிகளாக இருப்பவர்கள்கூட இதற்கு மறுப்புச் சொல்ல முடியாத அளவிற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆகவே, இந்தப் புத்தகத்தை நீங்கள் நாடு முழுவதும் பரப்பவேண்டும். இங்கே கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாம் தீர்ந்து போயிற்று.

ஒவ்வொரு முறையும், தேர்தல் பிரச்சார அனுபவம் எப்படியென்றால், நிறைய புத்தகங்கள் விற் பனையாகும். நம்முடைய இயக்கம் என்றாலே, அறிவுபூர்வமான விஷயங்களைச் செய்யக் கூடியதாகும். அந்த புத்தகங்களில், அடுத்த அடுத்த பதிப்புகளில் புதுப்புது செய்திகள் சேர்ந்துகொண்டே இருக்கும். அந்தப் புத்தகத்தை வாங்கி நீங்கள் பரப்பவேண்டும்.

ஒரு நாள்கூட நிற்காமல் வெளிவந்த ஏடு

விடுதலை' நாளேடுதான்!

இரண்டாவதாக, நம்முடையவிடுதலை' ஏடு - கரோனா காலத்தில் நான்கு பக்கங்கள் கொண்டு வெளிவந்தவிடுதலை' ஏடு - ‘பிடிஎஃப்' வடிவத்தில் எல்லோரும் படித்தார்கள். ஒரு நாள்கூட நிற்காமல் வெளிவந்த ஏடுவிடுதலை' நாளேடு தான். அதற்காகவிடுதலை' அலுவலகத் தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத் தனர். அவரவர்களுக்கு உடல்நலக் கோளாறு  வந்தாலும், யாரும் அதைப் பொருட்படுத்தாமல்விடுதலை' ஏடு வெளிவந்தது.

அதில் உங்களுடைய  பணியும் மிகச் சிறப்பானது. அதற்காக கழகத் தோழர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஒவ்வொரு கழகத் தோழரும் 10, 20 பேருக்கு பிடிஎஃப் வடிவத்தில் வாட்ஸ்அப் மூலமாக அனுப் பியதால் பல லட்சக்கணக்கில்விடுதலை' பரவிற்று. இன்னுங்கேட்டால், அச்சடித்துப் போகின்றவிடு தலை'யை விட, பிடிஎஃப்  வடிவத்தில் ஒவ்வொருவரும் 50 பேருக்கு, 100 பேருக்கு அனுப்பினோம், நண்பர் களுக்கு அனுப்பினோம் என்று சொன்னார்கள். அந்தப் பணி இப்பொழுதும் தேவைப்படுகிறது.

நாம் தான் முதல் குரலும்முதல் அறிக்கையும் கொடுக்கிறோம்

தேர்தல் நேரத்தில், நாம் எழுதுவதை நாடு முழு வதும் பரப்பவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பிரச் சினைகளுக்காக நாம் தான் முதல் குரலும், முதல் அறிக்கையும் கொடுக்கிறோம். நீங்கள் என்னவிடுதலை'யில் அறிக்கை வெளியிடுகிறீர்களோ, அதை வைத்துதான் நாங்களும் எழுதுகிறோம் என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நம்மீது ஒரு இனந்தெரியாத, அடையாளந்தெரியாத வெறுப்போ, அலட்சியமோ அல்லது வேறு கார ணங்களோ - அல்லது முதலாளிகளின் கட்டளை யாகக்கூட காரணமாக இருக்கலாம். நாம் அனுப்பு கின்ற அறிக்கைகளை வெளியிடமாட்டார்கள். நம் முடைய அறிக்கையைப் பார்த்து எழுதுகின்றவர் களுடைய அறிக்கையை விளம்பரப்படுத்துவார்கள். ஆனால், அதற்கு முன் அந்த அறிக்கை எங்கே இருந்து வந்ததோ, அதை விளம்பரப்படுத்தமாட் டார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை. நமக்கென்று ஒரு பத்திரிகை இருக்கிறது.

அய்யா அவர்கள் சொல்வார்,

‘‘எனக்குவிடுதலை' பத்திரிகை இல்லை என்றால் என்னாகும்? அதற்காகத்தான், ‘விடுதலை' வாரப் பத்திரிகையாக மாறக்கூடாது என்பதற்கு நான் முன் வந்தேன்'' என்று  சொன்னார். இதனைச் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், என்னுடைய வாழ்க்கை போனாலும் பரவாயில்லை, இயக்கக் கொள்கைகள், லட்சியங்கள் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இயக்க வெளியீடுகளைப் பரப்பவேண்டும்; சந்தாக்களை சேர்க்கவேண்டும்!

இன்றைக்கு உலகம் முழுவதும்விடுதலை'யைப் படிக்கிறார்கள். இங்கே படிப்பதைவிட வெளிநாடு களில் அதிகமாகப் படிக்கிறார்கள்.

எனவே, இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தைப் பரப்புவது முக்கியமான ஒன்று. இரண்டாவது மிக முக்கியமாகவிடுதலை' ஏட்டிற்கு சந்தா சேர்ப்பது.

விடுதலை' நாளிதழில் முக்கியமான தகவல்களை எல்லாம் திரட்டி திரட்டி தருகிறோம். நீங்கள் பல ஏடுகளைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை; ஏட்டுத்திக்குகளில் என்ற தலைப்பில் ஆங்கில நாளிதழ்களில் வருகின்ற முக்கியமான செய்திகளை வெளியிடுகிறோம். ஒற்றைப் பத்தி பகுதியில் அரிதான தகவல்களை எடுத்துத் தருகிறோம்.

விடுதலை' என்பது ஒரு கேளிக்கைப் பத்திரி கையல்ல. ஆகவே நண்பர்களே, இந்த வெற்றியை நோக்கி நாம் பயணிக்கவேண்டும் என்கிற கவலை நமக்கிருந்தால், முதலில் நாம் கடைபிடிக்கவேண்டியது நம்முடைய ஏடுகளைப் பரப்பவேண்டும்; இயக்க வெளியீடுகளைப் பரப்பவேண்டும்.

அடுத்தபடியாக நண்பர்களே, மிக முக்கியமான சில திட்டங்களை  உங்கள்முன்  வைக்கிறேன்.

பொதுச்செயலாளர் அன்புராஜ்  இங்கே உரை யாற்றும்பொழுது சொன்னார்; பெரியார் உலகம் மிக முக்கியமான ஒரு செயல்பாடு.

அதைவிட பயிற்சி முகாம்கள் மிகவும் முக்கியம். நம்முடைய இயக்கத்தில் பயிற்சி முகாம்கள் என்பது இன்றியமையாததாகும். இந்த வாரம் வெளிவந்த ஒரு வார ஏட்டில் மிக முக்கியமான தகவல் வந்திருக்கிறது. அதனை நம்முடைய இயக்கத் தோழர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு தகவலாகும்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.. வெற்றி பெறும் என்று  மத்திய உளவுத் துறை ஏற்கெனவே ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. அதேநேரம், எதிர் காலத்தில் .தி.மு..வினுடைய வீழ்ச்சிக்குக் காரண மாக இருக்கப் போவதும் பா...தான்.

நாம் என்ன சொல்கிறோமோ - அதைத்தான் இந்த வார ஏடும் சொல்லியிருக்கிறது.

 தமிழகத்தை மீட்டெடுப்பது மட்டுமல்ல;  அடகு வைக்கப்பட்டுள்ள .தி.மு..வையும் மீட்டெடுக்கவேண்டும்!

நம்முடைய பிரச்சாரத்தில், ‘‘தமிழகத்தை மீட்டெடுப்போம்  - வெல்வோம்'' என்று சொல்வதோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். தமிழகத்தை மீட்டெடுப்பது மட்டுமல்ல,  அடகு வைக் கப்பட்டுள்ள .தி.மு..வையும் மீட்டெடுக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்., பா... ஒரு டார்கெட் செய்கி றார்கள் - தி.மு..தான் வெற்றி பெறும்; தி.மு..வைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் எது பலகீனமாக இருக்கிறதோ அதனை முதலில் ஒழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய தத்துவம். இதைத்தான் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிக்காரர்களுக்கு, இதுபோன்ற ஒரு ஆழமான, லட்சிய ரீதியான,  எப்படிப்பட்ட வியூகங் கள் வகுக்கப்படுகின்றன என்பவையெல்லாம் சரியாகப் புரிவதில்லை. தேர்தலில் வியூகங்களை செயல்படுத்துவதற்காக பா... வேலை செய்யும். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைதியாக இருக்கும்.

இன்னுங்கேட்டால், இந்தியாவை ஆளக்கூடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் நம்மைப் போன்று வெளிப்படையாக வருகிறாரா? தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்திருக்கிறார்; எங்கேயாவது விளம்பரம் உண்டா?

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ரகசிய இயக்கம்

பா...வில் பொறுப்பில் இருக்கும் மோடி, அமித்ஷா போன்றவர்கள் வந்தால் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், இவர்களை வழி நடத்துகின்ற தலைவருக்கு எத்தனை மடங்கு விளம்பரம் செய்யவேண்டும்? ஆனால், அவர் எப்பொழுது வருகிறார்? எங்கே தங்குகிறார்? எப்பொழுது சென்றார்? என்ற செய்திகள் எல்லாம் வெளியே தெரியாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ரகசிய இயக்கம் என்ற அளவில் இருக்கிறது.

போர்முனை வியூகத்தில் மிகவும் முக்கியமானது!

சில செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள் கிறேன். நாம் எடுக்கவேண்டிய ஆயுதங்களை யார் தீர்மானிக்கிறார்கள்? நாம் தீர்மானிக்கக் கூடாது. நாம் தீர்மானிப்பது என்பது பழைய காலத்து முறை. ஆனால், இக்காலகட்டத்தில், நாம் எடுக்கவேண்டிய ஆயுதத்தை யார் தீர்மானிக்கிறார்கள் என்றால், நம்முடைய எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்.

எதிரிகள் எந்தமாதிரியான ஆயுதத்தை எடுக்கி றார்கள் என்பதைப் பார்த்து, நாம் அதற்குரிய ஆயுதத்தை எடுக்கவேண்டும். அதுதான் போர் முனை வியூகத்தில் மிகவும் முக்கியமானது.

அந்த அடிப்படையில் தான் அறிவாசான் தந்தை பெரியார் நம்மைப் பக்குவப்படுத்தி இருக்கின்ற காரணத்தினால்தான், அவர் உடலால் மறைந்து 47 ஆண்டுகளுக்கு மேலான சூழ்நிலையிலும், அவ ருடைய சிலையைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

நம்முடைய இயக்கம் எப்படி இருக்கிறது என்ப தற்கு இங்கே நடைபெறக்கூடிய பொதுக்குழு ஒன்றே போதும். இங்கே பார்த்தீர்களேயானால், வெறும் வயதானவர்கள் மட்டுமல்ல - எங்களைப் போன்று வயதானவர்கள், வெள்ளை முடி இருக்கிறவர்கள் அல்லது டை அடித்து கருப்பு முடி வைத்துள்ளவர் களைக் கணக்கெடுத்தால்கூட வயதானவர்கள் குறைவுதான்.

திராவிடர் கழகத்தில் முன்பு மகளிர் பிரிவு கிடையாது

அதேபோன்று இந்தப் பகுதியில், மகளிர் அமர்ந் திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தவுடன், நான் உற்சாகத்தோடு இருக்கிறேன், சோர்வு கிடையாது.

திராவிடர் கழகத்தில் முன்பு மகளிர் பிரிவு கிடை யாது. இப்பொழுது பார்த்தீர்களேயானால், மூன்று வகை இருக்கிறது.

வயதானவர்களும் இருக்கிறார்கள்; கிருஷ் ணேஸ்வரி போன்றவர்களும் இருக்கிறார்கள்; சீனியர் சிட்டிசன் கேட்டகரி - எங்களைப் போன்றவர்கள்.

அதற்கடுத்தது, அருள்மொழி போன்ற கூட்டம்;

அதற்கடுத்தது, மதிவதனி, மணியம்மை கூட்டம்.

மூன்று தலைமுறை இருக்கிறதா? இல்லையா?

நாங்கள் எல்லாம் பென்ஷனர்; பென்ஷன் வாங்கிக்கொண்டு வேலை செய்யக்கூடியவர்கள்.

அதற்கடுத்தபடியாக, நம்முடைய இளைஞர் பிரிவினர் அற்புதமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கள். இவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது? இதுதான் அவர்களுடைய திட்டம்.

இப்பொழுது நாம், தேர்தலுக்காக என்று  யாரையும் ஆதரிக்கவில்லை. தேர்தலை நாம் எப்படி பார்க் கிறோம் என்றால், ஒரு போர்க்களமாகப் பார்க்கிறோம்; ஒரு வியூகமாகப் பார்க்கிறோம்.

பெரியார் பேராயுதம் மட்டுமல்ல - போராயுதம்!

எப்படி பிரச்சாரக் களம் முக்கியமோ - அதே போல, தேர்தலுக்கு மிகமுக்கியமானது வியூகம்.

பெரியார் என்பவர் ஒரு பேராயுதம் - தேர்தலில் நாம் ஏந்த வேண்டிய ஆயுதம் பெரியார்.

நம்முடைய எதிரிக்கும் ஆயுதம் என்ன வென்றால், பெரியாரைக் குறி வைப்பதுதான். பெரியார் பேராயுதம் மட்டுமல்ல - போராயுதம், போராயுதம்!.

அதற்கு முன்பெல்லாம் வேலாயுதம், சூலாயுதம் எல்லாம் மிகச் சாதாரணம். அதனால், நமக்கொன்றும் பிரச்சினையல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் திரிசூலம் கொடுத்தார்; இப்பொழுது அவர் காணாமல் போய்விட்டார். பிரவீன் தொகாடியா என்பவரை அவர்களே ஒழித்துக் கட்டிவிட்டார்கள்.

அதேநேரத்தில், எதிரியினுடைய பலத்தை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.

திருக்குறள்  471  ஆவது குறளில்,

‘‘வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.''

 செயலின் வலிமையும். தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவருக்கும் துணை யானவரின் வலிமையும் எத்தகையவை என ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன், எதிரியினுடைய பலம் என்ன? நம்முடைய பலம் என்ன? நம்மை ஆதரிக்கிறார்களே அவர்களுடைய பலம் என்ன? நம்மை விட்டு எப்பொழுது ஓடுவார்கள்? என்று எல்லா வகையான கோணத்திலும் சிந்திக்க வேண்டும்.

‘‘மற்றொரு புறம் இன்றைக்கு நம்மைத் தீவிரமாக எதிர்க்கும் தி.மு.. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும் எங்கள் வழிக்கு வந்துவிடும்'' என்றெல்லாம் ஒரு கணக்குப் போடுகிறார்கள்.

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் அதற்குத் தெளிவான பதிலை சொல்லிவிட்டார். தி.மு.. கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. இந்தக் கூட்டணியிடம் அவர்களுடையபாச்சா' பலிக்காது.

ஆனாலும், எதிரியினுடைய தந்திரத்தைப் பாருங்கள், ஓர் இயக்கத்தில் உள்ள முக்கிய பொறுப் பாளரைப்பற்றி, தலைமையைப்பற்றி இவர் இப்படி சொன்னார் என்று ஒரு சந்தேகத்தை உண்டாக்குவது; இரண்டு முறை, மூன்று முறை, நான்கு முறை அதையே சொல்வது.

எஸ்' இருக்கிறாரே, தலைவராக இருக்கிறஒய்'யைப்பற்றி இப்படி மோசமாகப் பேசுகிறார் என்று செய்தியை வெளியிடுகிறார்கள்.

அவசரப்படுகிறவர்களாக இருந்தால், ‘‘நம்மைப் பற்றி இப்படி பேசியிருக்கிறாரே, அவரை என்ன செய்கிறேன் பார்'' என்று - ஒரு புள்ளியாக இருந்ததை - பெரிய அளவிற்கு உருண்டையாகும்; உருண்டை பெரிய அளவிற்கு ஆகும்.

இதுதான் சந்தேகத்தைத் தெளிப்பது - தூவுவது.

இது பஞ்ச தந்திரங்களில்  ஒன்று. ஆரியர்களுடைய பஞ்ச தந்திரங்களில் ஒன்று. நட்பைக் கெடுக்க வேண்டும்; முறிக்கவேண்டும் என்றால், ஒருவர் மேல் சந்தேகத்தை உண்டாக்கவேண்டும்.

(தொடரும்)

Comments