வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்களிப்பது எப்படி?

 தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விபரம்

புதுடில்லி, மார்ச் 21 தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் எப்படி வாக்களிக்கலாம் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காகவோ, படிப்பதற்காகவோ அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக சென்றிருக்கும் இந்திய குடிமக்கள் தங்கள் கடவுச்சீட்டில் குறிப்பிட்டிருக்கும் முகவரியில்,இந்தியாவில் ஒரு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,www.mvsp.in அல்லது தேர்தல் ஆணையத்தின் www.eci.nic.in என்ற இணையதளத்தில் படிவம் 6 என்பதைப் பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்படும் தேவையான ஆவணங்களையோ அல்லது ஆதாரங் களையோ இணைத்து தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தப் படிவம் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கட்டணம் செலுத்தாமல் கிடைக்கும்.இந்தப் படிவத்தை அஞ்சல் துறை மூலம் அனுப்புவதாக இருந்தால் அனைத்து ஆவணங்களின் இரண்டு பிரதிகளை சுய சான்று அளிப்புடன் வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதே சமயம், அலுவலரிடம் நேராக விண்ணப்பத்தை அளிக்க நேர்ந்தால் சரிபார்ப்புக்காக கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் பெறப்பட்டுள்ள வீட்டு முகவரிக்கு வாக்குச்சாவடி அலுவலர் நேரில் சென்று விசாரித்து ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்த பின் வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற தனிப்பிரிவில் இவர்களின் பெயர்கள் இடம்பெறும். வெளிநாட்டு வாக்காளருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது. வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்கும் போது கடவுச்சீட்டை ஆதாரமாகக் காண்பித்து வாக்களிக்க வேண்டும்.

முகக் கவசம் அணியாதோர் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி வழக்கு 

புதுடில்லி, மார்ச் 21 முகக் கவசம் அணியாத பேச்சாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில்  மனு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.   தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த கட்சிகளின் பேச்சாளர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியை சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட, அய்ந்து மாநில சட்டப்பேரவைகளுக்குத்  தேர்தல் நடை பெற உள்ளது.. இதற்காக டில்லி உட்பட, பல பகுதி களில் இருந்து கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பிரச்சாரத்துக்குச் செல்கின்றனர். தலைவர்களைப் பார்ப்பதற்காகவும், பேச்சைக் கேட்பதற்காகவும், மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். ஆகவே கரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பல நட்சத்திரப்பேச்சாளர்களும் பல வேட்பாளர்களும் முகக் கவசம் அணிவதில்லை.  இதனால் அவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  எனவே இவ்வாறு முகக் கவசம் அணியாமல் பிரச்சாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

பா...வின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா?: திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

கொல்கத்தா, மார்ச் 21 உங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்?  என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரெக் பிரையன் பாஜகவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் பாஜகவுக்கும் ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும்  மோதல் நீடித்து வருகிறது. அங்கு வரும் 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இநத் நிலையில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், முன்னாள் பாஜக மத்திய அமைச்சரான யஷ்வந்த்சின்ஹா உள்பட சிலர் சேர்ந்தனர். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  புதியதாக பாஜக தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து  வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய திரிணாமுல் எம்.பி. டெரெக் பிரையன், உங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று உங்களால் காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும்,  நான் பிரதமரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். உங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எங்களிடம் மம்தா இருக்கிறார். நீங்கள் ஏன் ஒரு பெயரை கூறமுடியவில்லை? ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் நீங்கள்  '' என பெயரிட்டால்,  'பி' மற்றும் 'சி' கிளர்ச்சி செய்யும். நான் சவால் விடுகிறேன். உங்கள் முதலமைச்சர் யார் என்று

அறிவியுங்கள் பார்க்கலாம்.

எங்கள் முதல்வர் மக்களுக்கு வாக்களிக்கிறார் உறுதியளிக்கிறார். ஆனால், உங்களால் உறுதி கூறமுடியவில்லை, வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவதில்லை   என்று விமர்சித்தார்.

Comments