நா.பஞ்சமூர்த்தி-அன்னைமணி இல்ல அறிமுக விழா

கழகப் பொதுச்செயலாளர் தலைமையில் மேனாள் அமைச்சர் திறந்து வைத்தார்

வேகாக்கொல்லை, மார்ச் 5- கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் நா.பஞ்சமூர்த்தி-அன்னைமணி ஆகியோரின் புதிய இல்ல அறிமுக விழா 28.2.2021  ஞாயிறு காலை 10 மணியளவில் வேகாக்கொல்லையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. மண்டல செயலாளர் நா. தாமோதரன் வரவேற்புரையாற்றினார். மேனாள்அமைச்சர் மாவட்ட தி.மு.. செயலாளர் எம்.ஆர்.கே. பன் னீர் செல்வம் இல்லத்தைத் திறந்து வைத்தார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி,  பேராசிரி யர் இராச. குழந்தைவேலன், மண்டல தலைவர் அரங்க.பன்னீர் செல்வம் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, செயலாளர் தென்.சிவக்குமார், மாவட் டத் தலைவர் இளங்கோவன் மாவட் டச்செயலாளர் வெற்றிச் செல்வன், மாநில இளைஞரணிச்செயலாளர் .சீ.இளந் திரையன், முத்துகதிரவன், சி.மணிவேல், நீதியரசர் செந்தில்குமார், ஒன்றிய தி.மு.. செயலாளர், வி.சிவக் குமார் மேனாள் சட்டமன்ற உறுப் பினர், டாக்டர் நந்தகோபாலகிருட் டினன் ஆகியோர் பங்கேற்று பாராட் டுரை வழங்கினர். முடிவில் நா.தட் சிணா மூர்த்தி நன்றி கூறினார்.

Comments