போடியில் தந்தை பெரியார் சிலை மறைப்பு அகற்றம்

கழகப்பொறுப்பாளர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

போடி, மார்ச் 18 தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரியார்  சமத்துவபுரத்தில்  தந்தைபெரியார் சிலையை தேர்தல் ஆணையம் மூடி இருந்தது.

தேர்தல் ஆணையம்  அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் கோரி கழகப் பொறுப்பாளர்கள் மேற்கொண்ட முயற்சியை அடுத்து தேர்தல் ஆணையம் அம்மறைப்பை அகற்றி உள்ளது.

கழகப்பொறுப்பாளர்கள் சார்பில்  ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Comments