டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· தேர்தல் நடைபெற உள்ள அய்ந்து மாநிலங்களில் தற்போது வரை கணக்கில் வராத 331 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம்
கைப்பற்றி உள்ளது. இதில் தமிழ் நாடு ரூ.127.64 கோடி. மேற்கு வங்கம் ரூ.112.59 கோடியாகும்.
· நாட்டில் விலைவாசி ஏற்றத்திற்கு பிரதமர் மோடியும், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தான் காரணம். அதிமுகவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், பாஜகவிற்கான வாக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி டெலிகிராப்:
· வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த நான்கு மாதங்களாக போராடும் விவசாய அமைப்புகள் மார்ச் 26-ஆம் தேதியன்று முழு அடைப்பு நடத்திட முடிவு செய்துள்ளது. ஹோலி தினமான மார்ச் 28-ஆம் தேதி வேளாண் சட்டங்களை எரிக்கவும் முடிவு.
· தனது 11 வயது மகள், ரேஷன் கடையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படாததால் இறந்தார் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொண்டு மத்திய அரசு உடன் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
- குடந்தை கருணா
18.3.2021