திராவிடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவு

நாகர்கோவில், மார்ச் 22- கன்னி யாகுமரி மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் திரா விடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவு கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நேற்று (21.3.2021) நடைபெற்றது.

திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி மேனாள் தலைவர் .சுரேஷ் வரவேற்று பேசினார்.  பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் .சிவதாணு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன்,  திராவி டர் மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்  இசைச்செல்வி ஆகியோர் கருத்துரை ஆற் றினார்கள்.  மாவட்ட அமைப் பாளர் ஞா.  பிரான்சிஸ் முன் னிலை வகித்தார். திராவிடர் இயக்க வரலாறு, திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் குறித்தும், பாசிச மதவாத சக் திகளிடம் இருந்து தமிழ கத்தை பாதுகாப்பது குறித் தும் உரையாற்றினார்கள். 

 நாகர்கோவில் மாநகர துணைத் தலைவர் கவிஞர் .செய்க் முகமது, இராஜ குமார், முத்து வைரவன், தர்மராஜ், சிதம்பரநாதன், பெரியார் பிஞ்சுகள் சு. மருத விழி, சு.இனிய நிலா, பெரியார் பற்றாளர் சியாமளா மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இளைஞரணி பொறுப் பாளர் மதுரை வெங்கடேஷ் நன்றி கூறினார்.

Comments