பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மாபெரும் தவறு: ரகுராம் ராஜன்

வாசிங்டன், மார்ச். 17 பொதுத் துறை வங்கிகளை இந்திய அரசு தனியார் மயமாக்குவது மிகவும் தவறான செயல் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுத் துறை காப்பீடு நிறுவனம் உள்ளிட்டவற்றை தனியார் மயம் ஆக்க உள்ளதாக தெரிவித்தார்.   மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங் களை நடத்தி வருகின்றன.

அந்தப் போராட்டங்க ளின் ஒரு பகுதியாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர்.   இந்த வேலை நிறுத்தத்தில் நாடெங் கும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் 1.80 லட்சம் கிளைகள் இயங்கவில்லை.   வங்கி ஊழியர்களின் இந்த போராட்டத்துக்கு முன் னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் செய்தி நிறு வனத்துக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில்பொதுத் துறை வங்கிகளை தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது மாபெரும் தவறு என நான் கருதுகின்றேன்.   அதுவும் நாட்டின் குறிப்பிட்ட அளவிலான வங்கிகளை வெளிநாட்டு வங்கிகளுக்கு விற்பது அரசியல் ரீதி யாகவும் சிறிதும் எளிதான தில்லை.

இந்த ஆண்டு அதாவது 2021_2022 பட்ஜெட்டில் தனியார்மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் தரப் பட்டுள்ளது.   பொதுத்துறை வங்கிகளின் தனியார் மயமாக்கல் குறித்து குறைந்த விவரங்களே உள்ளன.  அதே வேளையில் இந்திய தனியார் வங்கிகளில் ஒன்று பொதுத் துறை வங்கியை கையகப்படுத் தும் நிலையும் இருக்கலாம். ஆயினும்அவற்றுக்கு அந்த ஆர்வம் உண்டா என்பது தெரியவில்லை.

சென்ற ஆகஸ்ட் 2016-ல் அறிவிக்கப்பட்டு செயலில் உள்ள இடைக்கால பணவீக்க இலக்கு வரும் மார்ச் 31 உடன் முடிவடைகிறது. இதற்கு அடுத்தாக மேலும் 5 ஆண்டு களுக்கான பணவீக்க இலக்கு விரைவில் அறிவிக்க உள்ள னர். இப்படி இருக்க நிதிக் கொள்கையின் கட்டமைப் பில் பெரியளவில் மாற்றங்கள் செய்வதற்கு இது சரியான நேரமில்லை . இதனால் கடன் பத்திர சந்தை பாதிப்பு அடை யும்" என தெரிவித்துள்ளார்.

 

சென்னை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் உடலுக்கு  15.3.2021  அன்று முற்பகல் 11.50 மணி அளவில் மயிலாப்பூர் இடுகாட்டில்  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில்   வீரவணக்கம்  செலுத்தப்பட்டது. செயலாளர் செ..பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணி தலை வர் .மகேந்திரன், தரமணி கோ.மஞ்சுநாதன், கா.பெரியார் சித்தன் ஆகியோரும் வீரவணக்கம் செலுத்தினர்.

Comments