தாராசுரத்தில் 'திராவிடம் வெல்லும்' பிரச்சாரக் கூட்டம்

குடந்தை, மார்ச் 10-- குடந்தை கழக மாவட்டம், தாராசுரம் கிளை கழகம் சார்பில்   'திரா விடம் வெல்லும்' தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 25-02-2021, வியாழக் கிழமை, மாலை 6.00 மணியளவில் தாராசுரம் கடைவீதியில்  பொதுக் குழு உறுப்பினர், பெரியார் பெருந் தொண்டர் வை.இளங்கோவன் தலைமையில் குடந்தை பெரு நகர தலைவர் கு.கவுதமன், பகுத் தறிவாளர் கழகம் தி.இராஜப்பா ஆகியோர் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் சிறப்புரை யாற்றினார். மேலும் மாவட்ட தலைவர் கு.நிம்மதி, பொதுக் குழு உறுப்பினர் சு.விஜய குமார், மாவட்ட  துணைத் தலைவர் வே. கோவிந்தன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் மு.திரிபுர சுந்தரி,  பெருநகர செயலாளர் பீ.இரமேஷ், மாவட்ட இளை ஞரணி தலைவர்/பொதுக் குழு உறுப்பினர் .சிவக்குமார், குடந்தை பெருநகர து.தலை வர் .காமராஜ், பகுத்தறிவா ளர் கழகம் பட்டீசுவரம் . இராவணன், திருவிடைமரு தூர் (தெ) ஒன்றிய செயலாளர் .சங்கர், திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் .சிவக் குமார், திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர் வே.குணசே கரன், திருவிடை மருதூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் .திலீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச் சிக்கு வருகை தந்தோரை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் தினேஷ் வரவேற்றும் திருநாகேசுவரம் நகர செயலாளர் திராவிட பாலு நன்றி கூறியும் உரையாற்றினர்.

Comments