தலைவர் என்பவர் எதிர்நீச்சல், எதிர்ப்பில் வளரவேண்டும், அவர்தான் தந்தை பெரியார் - பேராசிரியர் வளனறிவு

பெரியார் நமக்கு அறிவுக் கவசம் - கலைவாணர், அறிஞர் அண்ணா ஆகியோருக்கு தக்க நேரத்தில் உதவியவர் - கவிஞர் நந்தலாலா

திருச்சியில் நடைபெற்ற புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை

திருச்சி, மார்ச். 17 திருச்சி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  புத்தகங்கள் வெளியீட்டு விழா திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை, அன்னை .வெ.ரா. மணியம்மையார் அரங்கில் மார்ச் 15 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

மாவட்ட கழக. தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் வரவேற்பு ரையாற்றினார். பொறியாளர் சண்முக வடிவேல், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் .சுப்ரமணியன், திருச்சி மாநகர தலைவர் துரைசாமி, பீமநகர் பகுதி தலைவர் முபாரக் அலி, லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர், செயலாளர் அங்கமுத்து, மண்டல மகளிரணி செயலாளர் கிரேசி, மாவட்ட மகளிர் பாச றைத் தலைவர் அம்பிகா கணேசன், லால்குடி மாவட்ட மகளி ரணித் தலைவர் அரங்கநாயகி, லால்குடி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் குழந்தை தெரசா, மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா பால்ராஜ், மண்டல இளைஞரணி தலைவர் அன்புராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நூல் வெளியீடு

திராவிடர் கழகத் தலைவர், தமிழர்  தலைவர் கி.வீரமணி அவர்கள் திராவிடம் வெல்லும் ஏன்? எப்படி? புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா? மூன்று வேளாண் சட்டங்கள் 2020, பெரியார் பதித்த கொள் கைத் திட்டங்கள், தந்தை பெரியாரின் பெண்ணு ரிமைப் போர், அண்டத்தைப் பார்க்கலாம் வாங்க, புத்தர் படக்கதை, உங்கள் சிங்கா மங்கா, யாச்சியின் குமிழி ஆசை, வாழ்வியல் சிந்தனை கள் (தொகுதி -15), ஒப்பற்ற தலைமை, ஒரு மார்க்சிஸ்ட் பார் வையில் திராவிடர் கழகம், முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்,  Periyar EV Ramasamy, A Man Ahead  of  his time  ஆகிய நூல்களை வெளியிட்டு உரையாற்றினார்.

நூல் அறிமுகவுரை

பேராசிரியர் .வளனறிவு (சூசை), .மு... மாநில செயலாளர் கவிஞர் நந்தலாலா, பேராசிரியை .திலவகதி ஆகியோர் நூல் அறிமுவுரையாற்றி னார். முன்னதாக லால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர் 72 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

கலந்து கொண்டோர்

பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில மாணவர் கழகச் செயலாளர் செந்தூர் பாண்டியன்,  பெல். ஆண்டிராஜ், திரு வெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், ராஜசேகர், மகாமணி, மணியன் (.), மாவட்ட .. தலைவர் மதிவாணன், குத்புதீன்,  காட்டூர் கனகராஜ், பிரான்சிஸ், பெல் ஆறுமுகம், பெல் அசோக்குமார், முருகன், ஜெயராஜ்,  உள்ளிட்ட கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக திருச்சி மாவட்ட .. செயலாளர் மலர்மன்னன் நன்றி கூறினார்.

பேராசிரியர் வளனறிவு

பேராசிரியர் வளனறிவு (சூசை) நூல் அறிமுக உரை ஆற்றும் போது,  "ஒப்பற்ற தலைமை என்ற நூலில் இரங்கல் இலக்கியமாக அமைந்த பனகல் அரசர் இரங்கலுரையில் ஒருதலைவர் இழிஜாதி, ஈனஜாதி எனப்பட்ட சூத்திர ஜாதிகள் விளிம்புநிலை மக்களின் உயர்வுக்குப்பாடுபட்டார். அதுதான் உயரிய தலைவரின் பண்பாகும். தலைவர் என்பவர் எதிர்நீச்ச லில் வளரவேண்டும். எதிர்ப்பில் வளரவேண்டும் அவர்தான் தந்தை பெரியார் என ஆசிரியர் வீரமணியின் உரைகளில் குறிப்பிடுகிறார். தலைமைப் பொறுப்புநெருப்பாற்றில் நீச்சலடிப்பதை போன்றது. பத்து பேர் பரிந்துரை செய்யக் கூறும் போது ஒருவருக்குத்தான் இயலும். அப்போது ஒன்பது பேர் விரோதி ஆவர். வாய்ப்புப் பெற்றவரும் தன்திறமையால் தான் கிடைத்தது என சந்தேகப்பேர்வழி ஆகிவிடு வார் என்ற தந்தைபெரியாரின் கருத்தை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அறிஞர் அண்ணாவின் முறியடிக்க முடியாத மூன்று சாதனைகள் என்ற நூல் அண்ணாவின் எட்டு பொழிவுகள் அடங்கியது. இரு மொழிக்கொள்கை சுயமரியாதை திருமண சட்ட ஏற்பாடு தமிழ்நாடு பெயர் மாற்றம். திமுக 1958 இல் தீர்மானம் தந்து தமிழ்நாடு பெயர் மாற்றத்தில் தோற்றது. ஒன்றிய அரசின் (UPSC) தேர்வில் தமிழ்மொழி வழி தேர்வு எழுத 1963 இல் தீர்மானம் கொண்டுவந்து தோற்றது. இன்றுசிலர் புரட்டாக பேசுகின்றனர். திராவிட இயக்கம் பேராயக்கட்சியை வீழ்த்தியது. இராஜாஜி "அது மலை மோதாதே" என்ற போது பெரியார் அவர்கள்  மயிரைக்கட்டி மலை இழுக்கிறேன் வந்தால் மலை போனால் மயிறு என்றார்.”அதிலும் கூட அக்கால சமணர் இழிவு உள்ளடங்கி யுள்ளதை அய்யா ஆசிரியர் கூறுகிறார் என்று பேசினார்.

கவிஞர் நந்தலாலா

பெரியார் பதித்த கொள்கை தளங் கள் மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 15 நூலினை அறிமுகம் செய்து கவிஞர் நந்தலாலா பேசும்போது,

பெரியாரின் தலைப்பிள்ளை,  அண்ணா அவர்களின் பெயரால் கட்சி வைத்திருக்கிற அமைச்சர்களை பார்க்கும்போது மிகவும்  காமெடியாக இருக்கிறது. சில அமைச்சர்கள் கை நிறைய கயிறுகளை கட்டியிருக்கிறார் கள் மணிக்கட்டு ஆரம்பிச்சு முழங்கை வரை கட்டியிருக்கிறார்கள். இட்லி பொட்டலம் போல இருக்கிறது. ஒருவேளை ஊழல் பொட்டலமா என்பது நமக்கு தெரியாது? எவ்வளவு கயிறு, ஆச்சரியமாக இருக்கிறது.

 அதேமாதிரி இப்போதெல்லாம் சில அமைச்சர்கள் வயல்களில் இறங்கி நாற்று நடுகிறார்கள் சில அமைச்சர்கள் டீ ஆற்றுகிறார்கள். ஏனென்று புரியவில்லை. ஒருவேளை அமைச்சர் வேலை முடிஞ்சு போச்சு என்று முடிவு எடுத்து விட்டார்களா, தெரியவில்லை?.

மோடி என்னவெல்லாம் செஞ்சு பார்க்கிறார். திருக்குறளுக்கு ஹிந்தி பெயிண்ட் அடிக்கிறாரு, அவ்வை யாருக்கு இந்தி மூலம் பூசுகிறார். இந்தியிலேயே கலந்துரையா டல் பேசுறாரு ஏன் தாடி கூட பெரிய அளவில் வளர்த்து பாக்குறாரு, தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதையெல்லாம் தடுத்துக் கொண்டே இருப்பது பெரியார் என்னும்பெரும் கிழவன்தான் அந்தப் பெரியார் தான். தமிழ்நாட்டுக்குள் இவர்களை வரமுடியாத அளவிற்கு செய்ததற்கு காரணம். “தளபதி ஸ்டாலின்தான் ஒரு சிறந்த தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார். கூட்டணிக் கட்சியின் சிறப்பாக பேசி வழிநடத்தி கூட்டணியை சிதறவிடாமல் காப்பாற்றிய முரண்தான் நாடு தேர்ந்த தலைவர் என்பதை மு..ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். “இயற்பியல், வேதியியல்என்பதெல்லாம் எப்படி ஒரு அறிவியல் துறையோ அதே போல தான் வாழ்வியல் என்பதும் ஒரு அறிவியல் பார்வை என்பதால் தான் வாழ்க்கையை வாழ்வியல் என்கிறார் ஆசிரியர். நல்ல பண்பு விரிந்த பார்வை மனிதாபிமானம் அன்பு கலந்த வாழ்க்கை எல்லாம் ஏதோ ஆன்மீகத்திற்கு மட்டுமே சொந்தம் என்பதை போன்று ஒன்று திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகிறது.

 நாத்திகர்கள்என்றால் முரடர்கள் மிகக் கடுமையாக இருப்பார்கள். அது போன்ற தோற்றமும் இன்று உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டுஅய்யா பெரியார்அவர்கள் எவ்வளவு சிறந்த பண்பாளராக வாழ்ந்தார் என்பதை மிக நேர்த்தியாக இந்த நூலில் விளக்கி யிருக்கிறார் ஆசிரியர்.

இரண்டு நிகழ்வுகளை ஆசிரியர் சொல்லுகிறார் ஒன்று திட்டமிட்ட சதியால் சிறையிலிருந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தை தந்தது. அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடி. அதே போலவே அறிஞர் அண்ணா அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது வெளிநாடு சிகிச்சைக்கு கிளம்பிய நேரத்தில் பணத்தை பொட்டலமாக மடித்து எடுத்துக்கொண்டு போய் வெளிநாட்டு சிகிச்சைக்கு நிறைய பணம் செலவாகுமே வைத்துக் கொள்ளுங்கள் என்று பெரியார் தந்த போது அண்ணா அவர்கள் கண்கலங்கிய காட்சியை உடனிருந்த  ஆசிரியர் சொல்லும்போது நன்று வெளிப்படுகிறது. அய்யா பெரியார் எவ்வளவுபெரிய பண்பாளர்தக்க நேரத்தில் தர வேண்டும் என்கிற மாண்பு கொண்ட மனிதர் என்பது வெளிப்படுகிறது.

 பெரியார் இந்த சமூகத்திடமிருந்து தான் பெற்றதைவிட இந்த சமூகத்தினருக்கு அதிகம் தந்தவர் என்பது புரியும் தக்கவருக்கு தக்க நேரத்தில் தக்க முறையில் தந்தவர் பண்பாளர் பெரியார் என ஆசிரியர் அவர்கள் பல விஷயங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் இந்நூலில், எனவேதான் பெரியார் பெரும் பண்பாளர் என்பதை நாம் உணர முடியும். இவ்வாறு பேசினார்.

Comments