புலவர் க.அமிர்தலிங்கத்தின் இறுதி நிகழ்வு

பெரியார் பெருந்தொண்டரான கடலூர் மாவட்டம் மஞ்சக் கொல்லை மானமிகு புலவர் .அமிர்தலிங்கம் (வயது 84)அவர்கள் 27 .3.2021 சனிக்கிழமை இயற்கை எய்தினார்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்களிடையே பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பி வந்த அவர் பெண்ணாடம் அரசுப் பள்ளியில் பணியாற்றிய காலங்களில் பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும் பணியாற்றினார்.

தமிழாசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது வாழ்நாள் முழுவதும் பெரியாரின் தொண்டனாக திராவிடர் கழகத்தில் பணியாற்றிய அவரது உடலுக்கு எழுத்தாளர் ஆறு. கலைச்செல்வன்,  மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன், இளைஞர் அணித் தலைவர் சுரேஷ், மஞ்சக்குழி தென்னவன், செயபால், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத் குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

அவர் உடல் மீது  கழகக் கொடி போர்த்தப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

Comments