ஆசிரியருக்குக் கடிதம் - தமிழர் தலைவர் அறிவுரைப்படி தேர்தல் பணியாற்றுவோம் இது பெரியார் மண் என்பதை மீண்டும் ஒரு முறை பறைசாற்றுவோம் !

இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தவைகளாக உள்ளன.அதுவும் ஜனநாயகம் என்றால் கேட்கவா வேண்டும் போட்டிகள் மட்டுமின்றி சூழ்ச்சிகளும் நிறைந்து உள்ளன. ஆம் அந்த வகையில் எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜனநாயக போட்டிகளை விட  மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், சூழ்ச்சிகள் வெல்வதற்கு துடிக்கின்றனர்.

அந்த சூழ்ச்சி சதியை முறியடிக்க தந்தை பெரியாரின் கைத்தடி தான்  மாமருந்து என்பதை தமிழகம் உணர்ந்து உள்ளது, ஏன் அந்த சூழ்ச்சியாளர்களும் உணர்ந்துள்ளார்கள்.

எப்படிப்பட்ட சதிகளையும், சூழ்ச்சிகளையும் அவர்கள் கைக் கொண்டாலும், தேர்தல் நேர்மையாகவும் நியாய மாகவும் பாரபட்சமின்றி நடந்தால் கடைசியில் வெல்வது என்னமோ பெரியாரின் கைத்தடிகளே என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டப் போகிறது, இதுவும் நம்மைவிட எதிராளிகளுக்கு மிகவும் நன்றாகவே தெரியும், எனவே அவர்களும் அவர்களின் கூட்டாளிகளும் இந்தத் தேர்தலில் ஏதாவது சதி செய்து சூழ்ச்சி செய்து வெல்லத் துடிக்கிறார்கள், அப்படிப்பட்ட சதிகளையும், சூழ்ச்சிகளையும், ஜனநாயக முறைப்படி நேர்மையாக வெல்ல, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி தேர்தல் பணியாற்ற வேண்டும்.அதற்கு நாம் தினமும் விடுதலை நாளிதழில் வரும் ஆசிரியர் அவர்களின் அறிக்கைகளையும்,பேட்டிகளையும், பேச்சுக்களையும், நன்றாக படித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டாலே சதிகளையும் சூழ்ச்சிகளையும் முறியடித்து நூறு சதம் வெற்றி நிச்சயமாக நமக்கே கிடைக்கும் என்பது திண்ணம்.

இது பெரியார் மண் என்பதை மீண்டும் ஒருமுறை பறைசாற்றுவோம்

வாரீர்!  வாரீர்!!  வாரீர்!!!...

- சா.ஜெபராஜ் செல்லத்துரை

ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர்

Comments