வேளாண் பெருங்குடி மக்களே! உங்கள் வாக்கு தி.மு.க.கூட்டணிக்கே!

1989இல் விவசாயத்திற்காக இலவச மின்சாரம் வழங்கி விவசாயிகளின் சுமையைப் பெருமளவு குறைத்தது எந்த ஆட்சி?

               கோலப்பன் குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாய தொழிலாளர் நலவாரியம், இதன்மூலம் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, ஓய்வூதியம், இறப்பு நிதி, விபத்து இறப்பு நிதி என்று இலட்சக்கணக்கான விவசாயிகள் பெற்ற உதவிகள் கணக்கில் அடங்காதவை.

               2006இல் அய்ந்தாவது முறையாக முதல்வராகப் பதவி யேற்ற மேடையிலேயே 22,40,739 விவசாயக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தவர் முதல் அமைச்சர் கலைஞர் அல்லவா?

               தலவரி, தலமேல்வரி, தண்ணீர் தீர்வை ஆகியவை கலைஞர் ஆட்சியில் அறவே ரத்து.

               1,79,000 நிலமற்ற ஏழைகளுக்கு 2,13,000 ஏக்கர் இலவச நிலம்.

               1996-2001 ஆண்டுகளில் 162 உழவர் சந்தைகள் திறப்பு. இதன் மூலம் பல்லாயிரம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து லாபம் பெற்றனர். இதில் இடைத்தரகு அடியோடு ஒழிக்கப்பட்டது.

               இந்தியாவிலேயே முதன் முதலில் விவசாயத்திற்கு என்றே தனியாக ஒரு வேளாண் பல்கலைக் கழகத்தை கோவையில் அமைத்தது தி.மு.. ஆட்சிதானே!

               நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்து 15 ஏக்கருக்கு மேல் இருந்த நிலங்களைக் கைப்பற்றி நிலமில்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட்டது எப்போது? இதில் 1,35,000 பேர் பயன் அடைந்தார்கள்.

               தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்திய ஆட்சி எது? இதன்மூலம் தனியார் வியாபாரி களின் ஏகபோகம் ஒழிக்கப்படவில்லையா?

               நெல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.

               கூட்டுறவு வங்கிகளில் உரிய நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி அறவே தள்ளுபடி!

               முதல்முதலில் பதவியேற்றச் சில ஆண்டுகளிலேயே உணவுப் பஞ்சம் இருந்த சூழலை மாற்றித் தன் நிர்வாகத் திறத்தால் அரிசி, கரும்பு, எண்ணெய் வித்துகள் உற்பத்தி யில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்கியவர் முதல் அமைச்சர் கலைஞர் அல்லவா?

Comments