கொரட்டூர் பகுத்தறிவுப் பாசறை சார்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

சென்னை, மார்ச் 7- ஆவடி மாவட் டம் கொரட்டூரில் நடைபெற்ற தெரு முனைக் கூட்டத்தில் தஞ்சை பெரியார் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

ஆவடி மாவட்டம் கொரட் டூர் பகுதியில் பகுத்தறிவு பாசறை சார்பில் கடந்த 19-2-2021, வெள்ளி மாலை 6 மணிக்கு தொடர்வண்டி சாலையில் (பிரிட்டானியா எதி ரில்) தெருமுனைக்கூட்டம் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாசறையின் ஒருங்கி ணைப்பாளர் இரா.கோபால் தலைமையேற்று உரையாற் றினார்.

தி.மு.. மாவட்டப் பிரதிநிதி சங்கர், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்டச் செய லாளர் .இளவரசு, மாநில அமைப் புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மண்டலச் செயலா ளர் தே.செ.கோ பால் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். தி.மு.. மாணவரணித் தோழர்கள் அபுதாகிர் நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்த, அமரன் அனைவரை யும் வரவேற் றுப் பேசினார்.

மாநில அமைப்புச் செய லாளர் வி.பன்னீர்செல்வம், ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பா.தென் னரசு, துணைத் தலைவர் முத்தழகு  ஆகியோரின் உரை யைத் தொடர்ந்து மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் செ.மெ. மதி வதனி உரையாற்றினார்.

கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன்திரா விடம் வெல்லும்என்ற தலைப்பில் சிறப் புரை ஆற்றினார்.

தோழர் பகலவன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.. மாவட்டப் பிரதிநிதி சங்கர், சரவணன், திரு வொற்றியூர் அரவிந்தன் ஆகியோர் முன் னிலை வகித்துச் சிறப்பித்த னர். திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட இளைஞர ணித் தலைவர் வெ. கார்வேந் தன், உடுமலை வடி வேல், செ.பெ.தொண்டறம், மாவட் டத் துணைச் செயலாளர் தமிழ்ச் செல்வன், பூவை வெங் கடேசன், அன்புச்செல்வி, அம்பத்தூர் சிவக் குமார், ஜெயந்தி, அறிவுமதி, பூ. இராமலிங்கம், ஆவடி தமிழ்மணி, ராஜீவ்காந்தி நகர் முருகேசன், உண்மை வாசகர் வட்டத் தலைவர் வஜ்ரவேலு, முகப்பேர் முரளி, திருமுல்லை வாயில் இரணி யன், அரும் பாக்கம் தாமோதரன், சஞ்சய் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments