பொன்னய்யா -இராமஜெயம் நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தர் பொன். முருகேசன் மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல்

பொன்னய்யா இராமஜெயம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவரும், அதன் வேந்தருமான நண்பர் பொன். முருகேசன் அவர்கள் (வயது 64) இன்று அதிகாலை (19.3.2021) காலமானார் என்பதை அறிய அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.

பொன்னய்யா - இராமஜெயம் கல்வி நிலையத்தை பள்ளி, கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக் கழகம் என்று படிப்படியாக உயர்த்தி, தஞ்சை, திருச்சி  போன்ற பல மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள் கல்வி பெற உழைத்த, எளிய நிலையிலிருந்து உழைப்பாலும் தனது சாதுர்யத்தாலும் உயர்ந்த பெருமகன் அவர்!

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர், கல்விக் குடும்பத்தவர், அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

19-3-2021

Comments