முதல் பெரியார் சமூகநீதி விருது

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழக அரசின் - தந்தை பெரியார் சமூகநீதி விருது வழங்கும் விழா - (26.2.1996) கலை வாணர் அரங்கில் எழுச்சியுடனும், உணர்ச்சி யுடனும் நடந்தது.

மாலை 4:00 மணியிலிருந்து - அரங்கத் துக்குள் பார்வையாளர்கள் வரத் துவங்கினர். தமிழ்நாடு முழுவதுமிருந்தும் கழகப் பொறுப் பாளர்களும் தோழர்களும் நிகழ்ச்சியில் பங் கேற்க வந்திருந்தனர். மாலை 5:30 மணிக்கு அரங்கம் முழுவதும் இருக்கைகள் நிரம்பி வழிந்து. தரையிலும் பார்வையாளர்கள் அமர்ந்துவிட்டனர்.

ஊசிபோட்டால் கேட்கக் கூடிய அள வுக்கு அமைதியான சூழலில் காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்த நாதஸ்வர இசை நிகழ்ச் சியின் துவக்கத்துக்காக பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட விழா மேடையில் - தந்தை பெரியார், தமிழக முதல்வர் படத்துடன்தந்தை பெரியார் சமூகநீதி விருது’ 1995 விருது வழங்கும் விழா என்ற வாசகங்கள் பொறிக்கப் பட்டிருந்தன. மேடையின் இரு பக்கச் சுவர் களிலும் தந்தை பெரியாரின் ஒளிச்சுடர் வடி வமைக்கப்பட்டிருந்தது.

தலைவர்கள் மேடைக்கு வந்து அமர்வதற்கு முன்பு - பெண் அறிவிப்பாளர் அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் பெரியார் சமூகநீதி விருதை - முதன் முதலாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி பெறுகிறார் என்று அறிவித்த போது - கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு - அரசு செய்துள்ள சாதனைகளை அறிவிப்பாளர் பட்டியலிட்டுக் கூறினார். 6:10 மணிக்கு தமிழக முதல்வர், கழகப் பொதுச் செயலாளர், அமைச்சர்கள் எஸ்டி. சோமசுந் தரம், லாரன்ஸ், பேரவைத் தலைவர் சேடப் பட்டி முத்தையா, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளர் எம்.தங்கதுரை ஆகியோர் பலத்த கரவொலிக்கிடையே மேடைக்கு வந்து அமர்ந்தனர்

கழகப் பொதுச்செயலாளர் நன்றி தெரி விக்கும் வகையில் மலர்க் கொத்துக்களை முதலில் முதல்வருக்கு வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் லாரன்ஸ் வரவேற்புரையாற்ற, தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் வாழ்த் துரை வழங்கிய பின் விருது. வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுச்செயலாளருக்கு தமிழக முதல் வர் பொன்னாடை போர்த்தி 5 பவுன் மதிப் புள்ள மெடலை அணிவித்தார். ‘பெரியார் சமூகநீதி விருதுஎன்ற வாசகம் பொறிக்கப் பட்ட பட்டயக் கேடயத்தையும் தந்தை பெரியார், தமிழக முதல்வர் படம் பொறிக் கப்பட்ட வெள்ளித் தட்டை நினைவுப் பரிசாகவும் - பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.  அப்போது சரியாக நேரம் 6:45 மணி: விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து முதலமைச்சர் பேசினார். பொதுச் செயலாளரின் லட்சியப் பிடிப்பை யும் விளம்பரம் விரும்பாத தொண்டையும் முதலில் மனம் திறந்து தனது உரையில் குறிப்பிட்டபோது அரங்கமே கரவொலி யால் அதிர்ந்தது.

ஏற்புரை நிகழ்த்த வந்த பொதுச் செயலா ளர் உரையைத் துவக்குவதற்கு முன் - முதல்வருக்கு பிறந்த நாள் பரிசு ஒன்றை வழங்கினார். 4000 அறிவியல் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்களைக் கொண்ட தமிழ் அறிவியல் அகராதியைக் கொண்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒன்றை பொதுச் செயலாளர் வழங்கினார். சென்னையில் உள்ள பெரியார் கணினி ஆய்வுக் கல்விய கமும் - வல்லத்தில் உள்ள பெரியார்நூற் றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கும் இணைந்து இதைத் தயாரித்திருந்தது.

முதலமைச்சர் தனது பிறந்த நாள் விழா வில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு விடுத்த வேண்டுகோளைப் பாராட்டி பொதுச்செயலாளர் - இந்தப் பரிசை வழங்கி தனது ஏற்புரையைத் தொடங்கினார்.

சமூக நீதிக் கொள்கையில் பெரியார் இயக்கம் செய்துவரும் தொண்டைப் பாராட்டி - இந்த விருதை முதல்வர் வழங்கி யிருப்பதைக் குறிப்பிட்ட பொதுச் செயலா ளர் - முதல்வர் இயக்கத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்ததுடன் ஒருபோதும் சமூகநீதிக் கொள்கைக்குத் துரோகம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துப் பேசினார்.

எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் - கருப்பு மெழுகுவத்திகளாகச் செயல்பட்டு வரும் லட்சோப லட்சம் கருஞ்சட்டைத் தோழர்களின் தொண்டுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமே இந்த விருது என்று பொதுச் செயலாளர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத் தியாகி களுக்கு சுதந்திரப் போராட்டத் தியாகிக ளுக்கு வழங்குவது போல் ஓய்வூதியம் தொகையை உயர்த்த வேண்டும். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற வர்களை அரசாங்கம் அங்கீகரித்து கவுர விக்கவேண்டும் என்கிற இரண்டு கோரிக் கையையும் முதலமைச்சரிடம் பொதுச் செயலாளர் வைத்தார்.

காவல்துறையில் தகுதியான விண்ணப் பதாரர்கள் இல்லை என்று கூறி - தாழ்த்தப் பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கக் கூடாது என்று கூறி விதிகளை மாற்றி தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இடங் களை வழங்க வேண்டும் என ஆணை யிட்ட முதல்வரை பொதுச்செயலாளர் பாராட்டினார்.

பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அவை நிகழ்ச்சியில் முதல்வர் வெளியிட்ட இத்தகவலை சுட்டிக்காட்டிய போது மேடையிலிருந்த பொதுச்செயலா ளரிடம் முதல்வர் - இது பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினார்.

1938இல் தந்தை பெரியாருக்கு பெண் கள்தாம் பெரியார் பட்டத்தை அளித்தனர். இப்போது பெண் முதலமைச்சர் மூலமா கவே - பெரியார் விருது தரப்படுகிறது என் பதைச் சுட்டிக்காட்டிய பொதுச்செயலாளர். ‘முன்னோக்கிச் சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெண்களுக்குத்தான் உண்டுஎன்று குறிப்பிட்டபோது முதலமைச்சர் கைதட்டி வரவேற்றார்.

- ‘உண்மை ‘ - மார்ச் 16-31, 1996

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image