நாப்கின் வழங்குவது ஒரு சமூகப் புரட்சி வரலாற்றை மாற்றிய தமிழர்கள் - வரலாறு படைக்கும் தி.மு.க.

ஒரிசாமாநிலத்தில் உள்ள கட்டக் பகுதியைச்சேர்ந்த நிவேதிதா மஹோபத்திரா கூறுகிறார்,

எனக்கு மாதவிடாய் நாட்களே புடிக்காது, 6-7 நாட்களுக்கு என்னால் எதுவும் செய்யமுடியாது, சானிடரி நாப்கின் வாங்கும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை, அந்த நாட்களில் பள்ளிக்கு செல்லமுடியாமல் போய்விடும்" என்கிறார். அவருக்கு வயது 14வயது, நிவேதிதா மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவியர் மாதவிடாய் காரணமாக  பள்ளிக்கு செல்லமுடியாமல் உள்ளனர். 

தேசிய "குடும்ப சுகாதார கணக்கெடுப்பில்", ஒடிசாவில் மட்டும் சுமார் 53 விழுக்காடு பெண்கள் சுகாதாரமற்ற வழிமுறைகளை பின்பற்றி மாதவிடாயை கையாளுகிறார்கள் என்று  தெரியவந்தது. 2019 ஆம் ஆண்டில் இளம்பெண்கள் சுகாதாரமற்ற முறையில் மாதவிடாய் காலத்தில் சாம்பல், காய்ந்த புற்கள், குப்பைகளில் கிடக்கும் கிழிசல் துணிகள் போன்றவற்றைப் பயன்படுத்தியதால்  புற்றுநோய் மற்றும் இதர தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 107 பேர் மரணமடைந்தனர்

இந்த அவலநிலையை போக்குவதற்காக கடந்த2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஒடிசா அரசாங்கம் "குஷி" திட்டத்தை துவக்கியது. இந்த திட்டத்தின் படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 17லட்சம் மாணவியருக்கு இலவசமாக "சானிடரி நாப்கின்" வழங்க 466 கோடி ரூபாயை ஒதுக்கி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.

6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு ஒவ்வொருவருக்கும்  மாதம் 18 சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன, கேந்திரிய வித்தியாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியரும் இதில் அடக்கம். பள்ளி மாணவிகளுக்கு மட்டுமில்லாமல், ஊரக பெண்களுக்கு ஒரு ரூபாயில் ஒரு சானிட்டரி நாப்கினை அரசு வழங்குகிறது.

இந்த திட்டம் படிக்கும் பெண்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தும் மாணவியரின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

உண்மையில் அவர்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது "குஷி திட்டம்"(குஷி என்றால் வடமொழியில் மகிழ்ச்சி என்று பொருள்.)  இந்த திட்டத்தை சிறப்பாக யோசித்து செயல்படுத்திய பெருமை, ஒடிசாவில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த இரண்டு இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை சாரும். ஒருவர் சிந்துசமவெளி ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன், இன்னொருவர் திரு.கார்த்திகை பாண்டியன்.    

சானிடரி நாப்கின் வழங்குவது ஆகப்பெரும் சமூக புரட்சி, அதை அவ்வளவு மலிவாக எடை  போட வேண்டாம்.

Comments