சிஏஏ - குடியுரிமைத் திருத்தச் சட்டமும் அ.தி.மு.க.வின் துரோகமும்!

மத்திய பா... அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) ஒன்றைக் கொண்டு வந்து நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. உலக நாடுகளும் இந்தியாவை வேறுவிதமாகப் பார்க்க ஆரம்பித்தன. அந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தில் ...தி.மு.. உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் ...தி.மு..வின் தேர்தல் அறிக்கையிலோ அதற்கு எதிரான வகையில் அந்தச் சட்டத்தை விலக்கிட அழுத்தம் கொடுப்போம் என்று குறிப்பிட்டு இருப்பது அஇஅதிமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி விட்டது. சிறுபான்மை மக்களின் வாக்குகள் எதிராக அமையும் என்பதால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவே இது.

மாநிலங்களவையில் சிஏஏ-வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

அதிமுக எம்.பி.க்கள்:

01. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

02. என். சந்திரசேகரன்

03. . முகமது ஜான்

04. .கே. முத்துக்கருப்பன்

05. . நவநீதகிருஷ்ணன்

06. ஆர் சசிகலா புஷ்பா

07. .கே. செல்வராஜ்

08. ஆர். வைத்திலிங்கம்

09. . விஜயகுமார்

10. விஜிலா சத்யநாத்

பாமக எம்.பி.:

11. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

சிஏஏவுக்கு எதிராக வாக்களிக்காமல் திமுக கூட்டணி வெளிநடப்பு செய்ததாக அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை என்ன?

மக்களவையில் தி.மு.. கூட்டணி எதிர்த்து வாக்களித்ததற்கான ஆதாரம் மக்களவை வலைத்தளத்தின் 615ஆம் பக்கத்தில் இருக்கிறது.

மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்:

திமுக எம்.பி.க்கள்:

1. ஆர்.எஸ். பாரதி

2.  டி.கே.எஸ். இளங்கோவன்

3. எம். சண்முகம்

4. திருச்சி சிவா

5.  பி. வில்சன்

மதிமுக எம்.பி:

6. வைகோ

காங்கிரஸ் எம்.பி:

7. .சிதம்பரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.:

8. டி.கே.ரங்கராஜன்

மாநிலங்களவை வலைதளத்தில் வாக்குப் பதிவு ஆதாரப் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பு முடிவை மாநிலங்களவைத் தலைவர்

அறிவித்ததை. காணொலியை கவனமாகப் பார்த்தால் தெரிய வரும்!

ஆதரவு  - 125

எதிர்ப்பு - 105

டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அந்த 10 அதிமுக எம்.பி.க்களின் வாக்குகள்தான் குடியுரிமைச் சட்டம் நிறைவேறக் காரணம்.

அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால்

ஆதரவு 125-11=114

எதிர்ப்பு 105+11=116

116-114 என்ற கணக்கில் சிஏஏ சட்டம் தோற்கடிக்கப் பட்டிருக்கும்.

இவ்வளவு மோசடியை செய்து விட்டு, இப்போது தேர்தல் அறிக்கையில் அந்த சட்டத்துக்கு எதிராக இருப்போம் என்று வெட்கமில்லாமல் அதிமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கிறார்கள் என்றால், மக்களை எந்த அளவுக்கு ஏமாளிகளாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்?

தேர்தல் நெருங்க நெருங்க - தோல்வி பயம் உலுக்க உலுக்க, இன்னும் எந்தெந்த வகைகளில்தான் அந்தர் பல்டி அடிப்பார்களோ என்று தெரியவில்லை.

"சிறுபான்மை மக்கள் குடியுரிமை இன்றியும் வாழ ஒப்புக் கொள்ள வேண்டும்" என்று கூறும் எம்.எஸ். கோல்வால்கர் கூற்றினை அப்படியே ஏற்கும் பா...வோடு சேர்ந்த கூடா நட்பால், ...தி.மு... என்னும் கப்பலில் பெரிய ஓட்டை ஏற்பட்டு, ஓட்டுகளை இழந்து கவிழப் போகும் பரிதாபத்திற்கு ஆளாகி விட்டது. இப்பொழுதே நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக!

Comments