கழகப்பொறுப்பாளர்களின் முயற்சியால் ஆலந்தூரில் பெரியார் சிலை மறைப்பு அகற்றம்

சென்னை,மார்ச் 12- ஆலந்தூர் நகராட்சி எதிரில் அமைத் துள்ள அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை தேர்தல் தேதி அறிவித்தவுடன் துணியை கொண்டு மூடி தந்தை பெரியார்  சிலையை மறைத்துவிட்டனர் அரசு அதிகாரிகள்.

தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மா.குணசேக ரன் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலந்தூர் வட்டாட்சியரிடம் மனுவை அளித்து தந்தை பெரியார் சிலையை மூடி யுள்ள மறைப்பை அகற்று மாறு கோரினர். அம்மனுவில் 2011ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் திரா விடர் கழகம் சார்பில் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கின் விசாரணை முடிவில் தேசிய தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது அதிலும் குறிப் பாக தந்தை பெரியார் அவர் களின் சிலையை மூடக்கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பின் நகலையும் இணைத்து வழங் கப்பட்டது.

மேலும், மனுவுடன் தந்தை பெரியார் சிலை தொடர்பான தலையங்கம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருந்த விடுதலை நாளிதழும் வழங் கப்பட்டது.

அரசுத்துறை அதிகாரி இது குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி கூறினார்.

தந்தை பெரியார் சிலையை மூடிய மறைப்பை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.

7.3.2021 அன்று தந்தை பெரியார் சிலையை மூடியி ருந்த மறைப்பு அகற்றப்பட் டது.

தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், சோமங்கலம் ஒன்றிய தலைவர் இனமாறன் என்னும் பாலமுரளி ஆகி யோர் கழகத்தின் சார்பில் அரசுக்கும், நகராட்சி நிர்வா கத்திற்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

Comments