கெட்டக் கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொத்தவரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 15, 2021

கெட்டக் கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொத்தவரை!

 கொத்தவரைக்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.

*கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.  இதில் மிகுந்துள்ள சுண்ணாம்புச்சத்து எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுவலி ஏற்படாமல் பாதுகாக்கும்.

*இதயத்திற்கு இதமானது. ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

*கொத்தவரையில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். இதில் சர்க்கரை, கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

*பெண்களுக்கு, குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் கொத்தவரையில் மிகுந்திருக்கிறது. இதில் அதிக அளவு போலிக் அமிலம் இருப்பதால் குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு ஆகியவை சீராக வளர்ச்சி பெற உதவும். வைட்டமின் கே குழந்தை நன்கு வளரவும் எலும்புகள் வலிமை பெறவும் உதவும்.

No comments:

Post a Comment