ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்

·     வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாய அமைப்புகளின் தலைவர் திகாயத், இந்த ஆண்டு டிசம்பர் மாதம்வரை, போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

·     பீகாரில் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ் டிரிய லோக் சம்தா கட்சி, நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளத்துடன் இணைந்தது. அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக உபேந்திரா நியமனம்.

·     50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற வரையறை குறித்த மறுபரிசீலனையை உச்ச நீதிமன்றம் துவக்கியுள்ளது ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சென்னை ராஜதானியில் நடைமுறைப்படுத் தப்பட்ட கம்யூனல் ஜி..வை நினைவுபடுத்துகிறது என டில்லி பல் கலைக்கழகப் பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

தி ஹிந்து

·     மாற்றுக் கருத்தை தெரிவிக்கும்  உரிமை பத்திரிகை சுதந்திரத்தின் மய்யமாக இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு அமைத்த குழுவில்  தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்

·     பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யு) தலைவர் ராகேஷ் சிங் திகாயத் மத்திய அரசை தொழில் அதிபர்கள் ஆட்சி செய்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

- குடந்தை கருணா

15.3.2021

Comments