அமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவெறிக்கு ஜோ பைடன் கடும் கண்டனம்

வாசிங்டன், மார்ச் 22   அமெரிக் காவில் அதிகரித்து வரும் ஆசிய எதிர்ப்பு இனவெறிக்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் அண்மைக்கால மாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக கரோனோ வைரஸ் பரவ தொடங்கியதற்கு பிறகு இது போன்ற தாக்குதல்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.

ஆசிய நாடுகளின் மக்களாலேயே கரோனா வைரஸ் பரவியது என்கிற தவறான கண்ணோட்டத்தில் அவர் கள் மீது வெறுப்புணர்வு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனை கண்டித்து அமெரிக்காவில் உள்ள ஆசிய அமெரிக்க சங்கங்கள் மற்றும் அமைப்புகள் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண் டாவில் ஆசிய அமெரிக்கர்களால் நடத்தப்படும் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத் தப்பட்டது. இதில் 6 ஆசிய அமெரிக்க பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயதான ராபர்ட் ஆரோன் லாங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் துப்பாக்கிச்சூடு நடந்த அட்லாண்டா நகருக்கு நேரில் சென்றனர்.

அங்கு அவர்கள் ஆசிய-அமெரிக்க தலைவர்கள் மற்றும் மாகாண சட்டசபை உறுப்பினர்களை நேரில் சந்தித்து இனவெறி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து நீண்டதொரு விவாதம் நடத்தினர்.

சுமார் 80 நிமிடம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜோ பைடன் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற் றங்கள் கரோனா தொற்று நோய்களின் போது அதிகரித்துள்ளன.

இனவெறி என்பது நம் தேசத்தை நீண்டகாலமாக வேட்டையாடிய மற்றும் பாதித்த ஒரு அசிங்கமான விஷம் ஆகும். இதனை முறியடிக்க அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என கூறினார்.

Comments