அஞ்சல் வாக்கு அளிக்க இருப்போர் வாய்ப்பை தவறவிட்டால் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியாது: தேர்தல் அலுவலர் அறிவிப்பு

 சென்னை, மார்ச் 27 அஞ்சல் வாக்கு அளிக்க இருப்போர் வாய்ப்பை தவறவிட்டால், சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போட முடியாது என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் அஞ்சல் வாக்குகள் அளிப் பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடனான ஆலோ சனைக் கூட்டம் நேற்று (26.3.2021) மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தலைமையில் நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

80 வயதுக்கு மேற்பட்ட முதி யோர்கள் மற்றும் மாற்றுத் திற னாளிகள் அஞ்சல் வாக்கு அளிப்பதற் கான பணிகள் தொடங்கியது.  26.3.2021 முதல் வீடு வீடாக வாக்குப்பதிவு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு பெறும் பணியை தொடங்கினர்.

இந்த பணியின்போது கரோனாவை கருத்தில் கொண்டு கூட்டம் சேராமல் இருப்பதற்கும் போதுமான வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அஞ்சல் ஓட்டு அளிக்கும் போது, ஒரு வேட்பாளர் சார்பில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

அஞ்சல் ஓட்டு பெறப்படும் வீட்டில், வாக்குப்பதிவு மய்யங்கள் போல உருவாக்கப்படும். ஒருவரது வீட்டில் அஞ்சல் வாக்கு பெறுபவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஆகும். வாக்குச்சாவடி மய்யத்தில் இருக்கும் 45 வயதுக்கு மேலான அனைத்து முகவர் களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணைத்தியத்தின் அறிவு றுத்தல்படி, வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு அலுவலர்கள் வருகை தரும் நேரத்தை தெரிவிப்பார்கள். அப்போது அவர்கள் வீட்டில் இல்லை என்றால், அடுத்த முறை மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும். 2ஆவது முறையும் அவர்கள் வீட்டில் இல்லை என்றால், வாக்காளர் அஞ்சல்  ஓட்டு போட அனுமதி கிடை யாது.

அவர்கள் வாக்குப்பதிவு மய்யத் துக்கும் சென்று ஓட்டு போட

முடியாது.

7,300 அஞ்சல் வாக்காளர்களில் யாருக்கும் கரோனா இல்லை. ஒரு வேளை ஓட்டு பதிவு அன்று, வாக்காளர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருந் தால், முழு உடல் கவச உடை கொடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக் கையுடன் வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள்.

அதனால் தான், ஓட்டுபதிவு நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணிற்கு இதுவரை 91 புகார்கள் வந்துள்ளது.

அதில் 90 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிவிஜில் செயலியில் 148 புகார்கள் வந்துள்ளது. அதில் 124 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரணி, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனுமதி கேட்பதில் 2,407 மனுக்கள் வந்துள்ளது. அதில், 1,430 மனுக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட் டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments