சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டுமாம் : அதானி கோரிக்கை

சென்னை, மார்ச். 15 சென்னை மீஞ்சூர் அருகில் அமைந்துள்ள அதானி நிறுவனத்திற்குச் சொந் தமான காட்டுப்பள்ளி துறை முகத்திற்கு அருகில் மீன் பிடிப் பதற்கு தடை விதிக்க வேண்டு மென்று அதானி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தேசிய நீர் வழித்தட அலுவலக இயக்குநருக்கு எழுதி யிருக்கும் கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளது.

மீனவர்கள் இந்த பகுதியில் வலை விரித்து மீன்பிடிப்பதால் துறைமுகத்திற்கு வரும் கப்பல் களுக்கு இடையூறு ஏற்படுவ தாகவும், இதனால், தங்கள் துறைமுகத் தொழில் பாதிக்கப் படுவதாக கூறி மீனவர்களை இந்த குறிப்பிட்ட இடத்திற்குள் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அந்த கடிதத் தில் கூறியிருக்கிறது.

எந்த பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்பதை வரைபடத் துடன் அனுப்பி இருக்கும் அந்நிறுவனம், மீன் பிடிப்பதற்கு இந்த இடத்திற்குள் நுழையவே அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள் ளது. இதனால், இந்த பகுதி மீன வர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், அதானி குழுமத்தின் இந்த கோரிக்கை மீது உரிய நட வடிக்கை எடுக்கக் கோரி தமிழ் நாடு கடல்சார் வாரியத்திற்கு தேசிய நீர் வழித்தட அலுவலகம் பரிந்துரைத்திருக்கிறது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image