பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மணியம்மையார் பிறந்தநாள் விழாபெண்கள் நுகர்வு கலாச்சாரத்திற்குஅடிமையாகக் கூடாது: சிறப்பு விருந்தினர் உரை


 வல்லம், மார்ச் 13 பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 10.03.2021 அன்று மணியம் மையாரின் 102 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் உலக மகளிர் நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

விழாவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச்செயலாளர் எஸ். தமிழ்ச் செல்வி சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது,

முற்போக்கு சிந்தனையுடன் செயல் படக்கூடிய பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்.

குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களை, வீரகண்டியன்பட்டி கிராமத் திற்கு அழைத்து வந்து பயன்பெற வகை செய்த  பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்.

பெரியார் காட்டிய வாழ்க்கைக்குரிய நெறிமுறைகள் மகத்தானவை. ஒவ்வொரு வருடைய மனதிலும் பெரியார் இருக் கிறார். அவரது பொன்மொழிகள் நம்மை வழிநடத்துகின்றன. அன்னை மணியம் மையார் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார். தந்தை பெரியாருக்குப்பின் இயக்கத்திற்குத் தலைமையேற்று வழி நடத்தினார்கள். சட்ட எரிப்புப் போராட் டத்தில் கைதான பட்டுக்கோட்டை இராம சாமி 1958ஆம் ஆண்டு சிறையில் இறந்து விட அவரது சடலத்தைப் பெறுவதற்கு மணியம்மையார் நடத்திய போராட்டமும் அதற்கு அரசு பணிந்ததையும் மணியம் மையார் வரலாறு நமக்கு உரைக்கிறது. மணியம்மையார் பெண்களுக்கு ஒரு வழிகாட்டி.

புத்தகங்களை வாசிக்க வேண்டும்

மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்று செயல்பட்டால் மட்டுமே வளர்ச்சி. கேக் வெட்டி கொண்டாடும் தினம் அல்ல மகளிர் தினம், கோலப்போட்டி நடத்தி கொண்டாடும் தினம் அல்ல மகளிர் தினம். ஆண்களுக்கு நிகராக இந்தச் சமுதாயத் தில் பெண்களுக்கு உரிமை, வேலைக் கேற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை எனப்பல கோரிக்கை களை வலியுறுத்திப் பெண்கள் போராடி னார்கள் வெற்றி பெற்றார்கள். 1975 ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் சபை மார்ச் 8 ஆம் நாளை உலக மகளிர் நாளாக பிரகடனப்படுத்தியது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

பெண்கள் நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகக் கூடாது. பெண்களுக்கு திருமணம் மட்டுமே இலக்கு அல்ல. பெண்களை அழகினால் மதிப்பிடக் கூடாது; அறிவினால் மதிக்கப்பட வேண் டும். பெண்கள் போகப் பொருளாக கருதப் படுவது தவறு, கருப்பா? சிவப்பா? என்பது முக்கியமல்ல; பெண்களுக்கு ஆரோக் கியம் முக்கியம். காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பெண்கள் மீது வன்கொடுமை நடைபெறுகிறது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வாழ்வியல், அறிவியல் மற்றும் மேலாண்மை புல முதன் மையர் முனைவர் பொ.விஜய லெட்சுமி விழாவிற்குத் தலைமை வகித்தார்.

சமூகப்பணித்துறைதலைவர் முனைவர் .ஆனந்த் ஜெரார்டு செபஸ் டின் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தது உரையாற்றினார்.

சமூகப்பணித்துறை முதுகலை இரண்டாமாண்டு மாணவி செ.சின்னமணி வரவேற்புரையாற்றினார்.

உயிரிதொழிநுட்பவியல்துறை உதவிப் பேராசிரியர் பெ.மாலா இணைப் புரை வழங்க சமூகப்பணித்துறை ஆராய்ச்சி மாணவர் .அபிராமி நன்றி யுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினருக்கு துணைவேந்தர் எஸ்.வேலுசாமி நினைவுப் பரிசு வழங் கினார். மேனாள் துணை வேந்தர் ஜானகி உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image