கரோனா தடுப்பூசி நம் உடலில் என்ன செய்கிறது ?

அய்தராபாத், மார்ச். 23 இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி 2021 ஜனவரி 16ஆம் தேதி அதிகாரபூர்வமாக தொடங்கியது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ள இணை நோய் உள்ளவர்கள் என்று அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

20-மார்ச்-2021 வரை, 4,46,03,841 'டோஸ்'கள் போடப் பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு ஆய்வு நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள இருவேறு மருந்துகள் இதுவரை பொதுமக்களுக்கு செலுத்தப் பட்டிருக்கிறது.

ஒன்று, ஆக்ஸ்போர்ட அஸ்ட்ரா ஜெனிகா கூட்டு கண்டுபிடிப்பான கோவி ஷீல்ட், மற்றொன்று, பாரத் பயோடெக் நிறுவன கண்டுபிடிப்பான கோவாக் சின். தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் அனைவரும் இரு தவணைகளில் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முதல் முறை தடுப்பூசி போட்டு 28 நாட்கள் கழித்து இரண்டாவது முறை தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

அதேபோல், முதல் முறை அவர்களுக்கு எந்த மருந்து செலுத்தப்பட்டதோ அதே மருந்து அடுத்த முறை செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அனைவருக்கும் இதற்கான குறிப்புகள் வழங்கப்பட்டு, மறுமுறை செல்லும்போது அதனை உடன் எடுத்துவர அறிவுறுத் தப்படுகிறார்கள். கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இந்த இரண்டு மருந்துகளின் செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக இங்கே வழங்கப்பட்டிருக்கிறது:

கோவிஷீல்ட் எனும் தடுப்பூசி, வீரியத்தை எடுத்த கரோனா வைரஸில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து, ஆக்ஸ் போர்ட அஸ்ட்ராஜெனிகா கூட்டு கண்டுபிடிப்பான இந்த மருந்தை, இந்தியர்களுக்கு ஏற்றது போல் மாற்றம் செய்து இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கப்படுகிறது. கோவாக்சின் எனும் தடுப்பூசி புரோட்டீன் அளவு குறையாத இறந்த கரோனா வைரஸை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த மருந்தை சீரம் நிறுவனம் மூலம் முற்றிலும் இந்திய தயாரிப்பாக வழங்குகிறது. உடலில் வைரஸ் இருக்கும் பகுதியில் சென்று அதன் அருகில் இருக்கும் செல்களை பாதுகாக்கும் பணியை செய்யும் கோவிஷீல்ட் இயற்கையாக நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில்லை.

மாறாக, கோவாக்சின் மருந்து உடலில் இயற்கையாக நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன், உடலின் பல பாகங் களில் வைரசுக்கு எதிரான செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இவ்விரு மருந்துகளும், முதல் கட்டமாக பரிசோதனை கூடத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து குறைந்த அளவு மனிதர்களிடம் செலுத்தி பரி சோதிக்கப்பட்டு, மூன்றாவது கட்டமாக பெருமளவிலான மக்கள் மற்றும் தன் னார்வலர்களுக்கு வழங்கி பரிசோதிக் கப்பட்டது. இந்த மூன்று கட்ட பரிசோதனை முடிந்த நிலையில் தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்று கட்ட பரிசோதனையின் முடிவில் - கோவிஷீல்ட் மருந்தின் செயல்திறன் 70 சதவீதம் என்றும் கோவாக்சின் மருந்தின் இடைக்கால அறிக்கையின் படி அதன் செயல்திறன் 81 சதவீதமாகவும் உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வோரில் வெகு சிலருக்கு காய்ச்சல், உடல் வலி, சோர்வு இருப்பதாக தெரியவந்தாலும், நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று தெரிகிறது. பாலூட்டும் தாய்மார்கள், தடுப்பூசிகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் ஆகியோருக்கு இந்த தடுப்பூசி போடப்படுவது இல்லை. அதுபோல், தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்களும் மருத்துவர்களிடம் தங்களுக்கு உள்ள நோய் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக் கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும் இந்த மருந்து, தனியார் மருத்துவ மனைகளில் சென்று போட்டுக்கொள்வதற்கு அதிகபட்ச கட்டணமாக ரூ. 250 நிர்ணயிக்கப்பட்டிருக் கிறது. இருந்தபோதும், இந்த இரண்டு மருந்துகளில் எந்த மருந்தை போட்டுக் கொள்வது என்பதை பொதுமக்கள் தீர் மானிக்க முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.

Comments