கரோனா நுண்ணுயிரி வேகமாக பரவும் வகையில் உருமாற்றம்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

லண்டன், மார்ச் 17- -வவ்வாலின் உடலிலிருந்து வந்த கரோனா நுண்கிருமி மனிதர்களிடம் பரவுவதற்கு ஏற்ப மிக சிறிய அளவில் தன்னை உருமாற்றிக் கொண்டது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக ஓர் உயிரினத்திலிருந்து மற்றோர் உயிரி னத்தின் உடலில் வாழ்வதற்கு ஒரு நுண்ணுயிர் தன்னை உருமாற்றம் செய்து கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள் ளும். ஆனால், வவ்வாலில் இருந்து உருமாற்றம் பெற்ற கரோனா நுண்ணுயிர் மனி தர்களிடம் வேகமாக பரவும் வகையில் விரைவில் உருமாற் றம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற் படுத்தியுள்ள கரோனா நுண் கிருமி உருமாற்றம் குறித்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளாஸ்கோ பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. நுண்கிருமி ஆய்வாளர் ஆஸ்கா மேக் லீன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்ட னர். அதில், வவ்வாலின் உட லில் இருந்து வந்த கரோனா நுண்கிருமி தன்னை பெரிய அளவில் உருமாற்றம் செய் யாமலேயே சிறிய அளவில் தன்னை மாற்றிக் கொண்டு மனிதர்களின் உடலில் புகுந்து பரவுவதற்கான திறனைப் பெற் றுள்ளது தெரிய வந்துள்ளது.

Comments