வங்க பாஜக வேட்பாளர்கள் பட்டியல் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறும் தலைவர்கள்

கொல்கத்தா, மார்ச். 15 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து சில மணிநேரங்களில், கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறி, மூத்த உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

 சில பாஜக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ததுடன், அவர்களின் ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தியுள்ளனர். மேற்கு வங்க பாஜக தலைவர்களில் ஒருவரான சோவனுக்கும் அவரது நண்பரான பைக்ஷாகிக்கும், பாஜகவில் இம்முறை வாய்ப் பளிக்கப்படவில்லை என்பதால், அவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். 

2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு தேர்தல்களில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற பெஹலா பூர்பாவில் சோவன்  போட்டியிட விரும்பியிருந்தார். இது தொடர்பாக, மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷுக்கு சோவன்  எழுதிய கடிதத்தில், அவரும் பைக்ஷாகி  இனி பாஜக கட்சியில் இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். பைக்ஷாகி  தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்த தாகவும், இந்த சதியும் துரோகமும் நீண்ட காலம் நிலைத் திருக்காது என்றும் தனது முகநூல் பக்கத்தில் பா...வை விமர்சித்துள்ளார்.

அலிப்பூர் த்வார் மாவட்ட பாஜக தலைவர், ஹூக்லி மாவட்ட முன்னாள் தலைவர் உட்பட பலர், பாஜகவின் வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை. மாணவிசஃபூரா சர்கார் கைது மனித உரிமைக்கு எதிரானது

அய்.நா. கண்டனம்

புதுடில்லி. மார்ச். 15 ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவி சஃபூரா சர்காரை கைதுசெய்து சிறையில் வைத்த இந்திய அரசின் செயல், உள்நாட்டு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மனித உரிமைகள் மற்றும் பன்னாட்டு ஒப்பந்த விதிமுறை களுக்கு எதிரானது என்று அய்.நா. அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

தன்னிச்சையான தடுப்புக் காவல் தொடர்பான அய்க்கிய நாடுகள் சபையின் செயற்குழு இந்தக் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

டில்லியில் சிஏஏ போராட்டம் தொடர்பாக, இந்துத்துவ குழுக்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில், மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள டில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சஃபூரா சர்கார்.

இவர், அந்தக் கலவரத்திற்குக் காரணமான முக்கிய குற்றவாளிகளுள் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருமுறை கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார் சஃபூரா சர்கார். கைதின்போது, அவர் 23 வாரகால கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, கடந்தாண்டு ஜூன் மாதம்தான் இவருக்கு பிணை கிடைத்தது. இந்நிலையில்தான், இவரின் கைது பன்னாட்டு மனித உரிமைகள் விதி முறைக்கு எதிரானது என்று அய்.நா. சபை அறிவித் துள்ளது. உள்நாட்டு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மனித உரிமைகள் மற்றும் பன்னாட்டு ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image