ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஒசூர், மார்ச் 21 ஒசூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்  ஒசூர் தோழர் வசந்த் சந்திரன் அலுவலக வளாகத்தில்  17.3.2021 அன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலை மையில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி வரவேற்றார்.

குடந்தையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு முடிவின்படி,  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைப்பது எனவும் தேர்தல் பிரச்சாரத்திற்க்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் .செ.செல்வம், மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணி தலைவர் சி.மணி,. மாவட்ட துணைச் செயலாளர், ஜெயசந்தர்,மாவட்ட துணைத் தலைவர் செயசந்திரன், அமைப் பாளர் .முனுசாமி,மாவட்ட மகளி ரணி தலைவர் செ.செல்வி, அமைப் பாளர் பா.கண்மணி, மாணவர் கழக அமைப்பாளர் .கா.சித்தாந்தன், மாநகர தலைவர் கார்த்திக், செய லாளர் அஃப்ரிடி, இளைஞரணி துணைச் செயலாளர் ஹரிஸ், ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ், ..மேனாள் நகர செயலளார் வசந்த்சந்திரன், விடுதலை சிறுத் தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் இளையராஜா, தருண் இந்திரஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments