ஆன்லைன் திறனாய்வுத் தேர்வு

சென்னை, மார்ச் 6- இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ட்ரையம்பண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் எஜுகேஷன், நாளை மார்ச் 7ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான (CAT21/22) என்னும் பொது நுழைவு தேர்வு ஆர்வலர்களுக்கான ஆன்லைன் திறனாய்வுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இருவகை நேரங்களை கொண்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இரண்டு நேரங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்யலாம். இரண்டு இடங்களுக்கும் பதிவு செய்ய முடியாது.

தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான கேட் வகுப் பறை மற்றும் ஆன்லைன் கல்வி கட்டணத்தில் 100 விழுக்காடு உட்பட பல்வேறு சலுகைகள் உள்ளன.

பதிவு இணைப்பு: https://www.time4education.com/local/articlecms/page.php?id=4430

Comments