ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், சென்னை:

·     புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தலில் காங்கிரசுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும் மீதமுள்ள 2 இடங்களை கூட்டணி கட்சிக்கும் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கருநாடகாவில் லிங்காயத் பிரிவினர் உள்ளிட்டோர்க்கும் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் மூன்று நபர் கொண்ட குழுவை அம்மாநில அரசு அமைத்து உள்ளது.

தி டெலிகிராப்:

·     மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறும் முதல்வர் மம்தா பானர்ஜி, அனை வரும் அமைதி காக்க வேண்டும் என்றும் விரைவில் சக்கர நாற்காலியில் பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

·     சுதந்திரத்திற்காக அன்று பஞ்சாப், மேற்கு வங்க மக்கள் போராடினர். அதேபோன்று இப்போது வேளாண் சட்டங்களை எதிர்த்தும், மேற்கு வங்க தேர்தலிலும் பாசிச சக்திகளை எதிர்த்தும் போராடியாக வேண்டும் என விவசாய அமைப்பின் தலைவர் பேசியுள்ளார்.

·     தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கிட 102ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், மாநில அரசு களின் அதிகாரத்தை குறைத்திடுகிறது என்ற எதிர்க்கட்சிகள் 2018இல் கூறிய குற்றச்சாட்டை தற்போது உச்ச நீதிமன்றத்தின் கருத்து உண்மையாக்கி விட்டது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து உள்ளன.

- குடந்தை கருணா

12.3.2021

Comments