குடந்தையில் திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்


 குடந்தை, மார்ச் 7- குடந்தை கழக மாவட்டம், குடந்தை பெருநகர திராவிடர்கழகம் சார்பில்  திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட் டம் 1.3.-2021, திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் குடந்தை காந்தி பூங்காவில்  குடந்தை பெருநகர தலைவர் கு.கவுதமன் தலைமையில் பகுத் தறிவாளர் கழகம் தி.இரா ஜப்பா, குடந்தை ஒன்றிய செயலாளர் .ஜில்ராஜ் ஆகியோர் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

கழகப் பேச்சாளர்  இராம. அன்பழகன் சிறப்புரையாற் றினார்.

தஞ்சை மண்டலச் செய லாளர் .குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட் டச் செயலாளர் சு.துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், மாவட்ட  துணைச் செயலாளர் .தமிழ்மணி, மாவட்ட மகளி ரணி துணைச் செயலாளர் மு.திரிபுரசுந்தரி, குடந்தை ஒன்றிய அமைப்பாளர் அசூர் செல்வம், குடந்தை நகர கழ கப் பொறுப்பாளர் மரு.சக்தி வேல், பட்டீஸ்வரம் நகரத் தலைவர் .இளவழகன், பட்டீஸ்வரம் பகுத்தறிவாளர் கழகம்.இராவணன், போட்டோ மகாதேவன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் .முரு கானந்தம், தெற்கு ஒன்றிய செயலாளர் .சங்கர், திரு விடைமருதூர்  ஒன்றிய அமைப்பாளர் .சிவக்குமார்,  பவுண்டரீகபுரம் கு.முருகே சன், திருவிடைமருதூர் ஒன் றிய துணைச் செயலாளர் வே.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச் சிக்கு வருகை தந்தோரை பெரு நகர செயலாளர் பீ.இரமேஷ் வரவேற்றார். மாவட்ட இளை ஞரணித் தலைவர் .சிவக் குமார் நன்றி கூறினார்.

Comments