செய்தியும், சிந்தனையும்....!

கதறுவதும் - பதறுவதும் ஏன்?

மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்புக் கிடைக்காத .தி.மு..

எம்.எல்.பரமேஸ்வரி முதலலமைச்சரிடம் கதறி அழுதார்.

கதறுவதற்கும்பதறுவதற்கும் இதில் என்ன இருக்கிறது. ‘ஏதோ அதில்இருக்கிறதுஅப்படித்தானே!

சட்ட விரோதம்தான்!

இட ஒதுக்கீட்டுக்கு 50% வரம்பு நிர்ணயம் - மறு ஆய்வு செய்யவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் இதில் வரம்பு நிர்ணயிக்கப்படாத நிலையில்உச்சநீதிமன்றத் தீர்ப்பு சட்ட விரோதம்தானே!

நம்பித் தொலையுங்கள்!

முதலமைச்சர் பழனிசாமி பெயரில் சொந்த வீடுசொந்த நிலம் இல்லை!

எல்லாவற்றையும் நம்பி தொலைக்க வேண்டியதுதான்.

நூலால்ஆபத்துதான்!

திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து 10 ஆயிரம் பனியன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திப் போராட்டம்.

மத்திய பா...வின் ‘உபயம்!'

பா...வின் யோக்கியதை!

தி.மு..விலிருந்து காலையில் விலகிமாலையில் பா...வுக்குக் கட்சி மாறிய சரவணன் என்பவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு.

கட்சி மாறிய ஆசாமியின் யோக்கியதையும், 'ஆன்லைன்மூலம்அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்ட பா...வின் யோக்கியதையும் அம்பலமானது.

சிறுபான்மையினர் கவனத்துக்கு...

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: - தி.மு.தலைவர் தளபதி மு..ஸ்டாலின்

சிறுபான்மையினர் வயிற்றில் பால் வார்ப்பு!

எங்களப்பன் குதிருக்குள் இல்லை!'

மம்தா காயம் அடைந்ததில் சதித் திட்டம் ஏதுமில்லை : - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

தேர்தல் ஆணையத்தின் ‘வேலையா இது?' ‘‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை'' என்கிறது தேர்தல் ஆணையம்.

ஒவ்வொருவரும் அமைச்சர்

.தி.மு.தேர்தல் அறிக்கை வெளியீடு.

நாட்டு மக்கள் அனைவரும் அமைச்சர் ஆக்கப்படுவார்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்!

மக்களின் நம்பிக்கை!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்என்ற நிகழ்ச்சிகளில் தி.மு.தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களிடம் மக்கள் அளித்த மனுக்களின் எண்ணிக்கை 17 லட்சம்

தி.மு..மீது மக்களுக்கு இருக்கும் நன்னம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு விவஸ்தையே இல்லையா?

புதுச்சேரி மாநிலத்தில் 5 தொகுதிகளை .தி.மு..வுக்கு பா..ஒதுக்கியுள்ளது.

.தி.மு..வின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களாயாருக்கு யார் இடங்களை ஒதுக்குவதுபா...வின்  அடிமை .தி.மு.என்பதற்கு லேட்டஸ்ட் எடுத்துக்காட்டு.

சக்கரமும் - சர்க்காரும்!

சக்கர நாற்காலியில் அமர்ந்து மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம்.

சர்க்காரை மீண்டும் பிடிக்க இந்த சக்கர நாற்காலி சுழலுமோ!

 

Comments