பசுமைப் போர் வீரர் ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் மறைவு

தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்

சுற்றுச்சூழல் ஆர்வலரும், தொண்டறச் செம்மலும், கம்யூனிசக் கோட்பாட்டில் திளைத்தவருமான ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் (வயது 74) நேற்று (2.3.2021) இயற்கையெய்தினார் என்பதை அறிய மிகவும் வருத்தமும், துயரமும் அடைந்தோம்!

தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்ட கொள்கைக் குடும்பத்தவர் அவர். எவரிடத்திலும் தொண்டு மனப்பான்மையுடன், தொழிலைத் தொண்டாக நடத்தியவர் -  நல்ல எழுத்தாளரும்கூட.

அவரது மறைவால் வருந்தி துயறுரும் இழப்புக்கு ஆளான அவரது குடும்பத்தாருக்கும், "தோழர்களுக்கும்" நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

 

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை

3-3-2021

Comments