‘‘இவற்றை சாதித்தது எந்த ஆட்சி?''

தனியாரிடம் இருந்த போக்குவரத்தைத் தேசியமயமாக்கி போக்குவரத்துத் துறையை உருவாக்கியது யார்?

அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் வழித்தடங்களை அமைத்தவர் யார்?

1500 பேர் கொண்ட கிராமங்கள் அனைத்தையும் நகரங்களோடு இணைக்க சாலைகளைப் புதிதாக ஏற்படுத்திய ஆட்சி எது?

குடிசை மாற்று வாரியம் அமைத்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்த முதலமைச்சர் யார்?

குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்த ஆட்சி எது?

மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி 3,000 கிலோமீட்டர் தூரத்திற்குமேல் நான்கு வழிச் சாலைகள் அமைய காரணமாக இருந்தவர் யார்?

சென்னை - மதுரை மின்மய இரட்டைவழி ரயில்பாதை வந்தது எப்படி?

ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் கொண்டு வந்த ஆட்சி எது?

ஆசியாவின் மிகப்பெரிய கிளவர் இலை வடிவ மேம்பால மான கத்திப்பாரா உட்பட பெரும்பாலான மேம்பாலங்கள் உருவானதற்கு உந்து சக்தியாக இருந்தது எந்த ஆட்சி?

ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கலைஞர் ஆட்சியில்தானே உருவானது.

எண்ணற்ற உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து நிர்வாகங்களை உருவாக்கி துரிதமான மக்கள் சேவைக்கு வழி செய்த ஆட்சி திமுகவே!

ஆதரிப்பீர் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும்!

Comments