ஒசூரில் கழக வெளியீட்டினை வழங்கி தேர்தல் பரப்புரை வாக்கு சேகரிப்பு

 ஒசூர், மார்ச் 29- ஒசூர் மாவட்ட கழகம் சார்பில் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முனீஸ்வர் நகர், ..சி.நகர், சிவகுமார் நகர், துவாரகா நகர், தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்புகள், டி.வி.எஸ்.நகர், அன்னை நகர், பிருந்தாவனம் நகர், மூவேந்தன் நகர், இந்திரா நகர் சமத்துவபுரம், முல்லை நகர், தேர் பேட்டை, டெம்பிள் அக்கோ, ஆவலபள்ளி அட்கோ, பஸ்தி, என்.ஜி. காலனி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வாக்காளர்களிடம் இயக்க வெளியீடான "திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்  ஏன்? அதிமுக-பிஜேபி கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்"என்ற நூலை மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், செயலா ளர் மா.சின்னசாமி, ஒசூர் மாநகர தலைவர் கார்த்திக், மாணவர் கழக அமைப்பாளர் .கா.சித்தாந்தன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன் ஆகியோர் வழங்கி திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

Comments