அ.தி.மு.க. என்றால் ‘அடகு வைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம்!'

தமிழ்நாட்டை மட்டுமல்ல-.தி.மு..வையும் மீட்டாகவேண்டும்!

கும்பகோணம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

கும்பகோணம், மார்ச் 21   அ.தி.மு.க. என்றால் ‘அடகு வைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம்!' தமிழ்நாட்டை மட்டுமல்ல, அ.தி.மு.க.வையும் மீட்டாக வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்!

கடந்த 13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில்  தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

காலங்காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமு தாயத்தில், மனுநீதி இந்த நாட்டை ஆண்ட காரணத் தால், எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வி யைக் கொடுக்கக் கூடாது; பஞ்சமனுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது; பெண்கள் படிக்கக் கூடாது. அதற் கும் கீழே இருக்கக்கூடியவர்கள் படிக்கக் கூடாது.

இப்படி சொன்ன ஒரு சமுதாயத்தில், நாட்டில் சமூகநீதிக் கொடியை ஏற்றி, எல்லோருக்கும் எல்லாம் - அனைவருக்கும் அனைத்தும் என்று ஆக்கிய பெருமை  - தந்தை பெரியார் என்ற அந்த மாபெரும் அறிவாசானுக்கு உண்டு. அவர் தோற்றுவித்த இயக்கத்திற்கு உண்டு.

அந்த வழியிலேதான் பேரறிஞர் அண்ணா - அந்த வழியிலேதான் கலைஞர் - அந்த வழியில்தான் இன் றைக்கு நம்முடைய தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் - திராவிட முன்னேற்றக் கழகம் - அதனுடைய கூட்ட ணிக் கட்சிகள் என்ற கொள்கைப் பூர்வமான கூட்டணி.

.தி.மு.. என்றால் அடகு வைக்கப்பட்ட

திராவிட முன்னேற்றக் கழகம்!

மற்ற செய்திகளை மறந்துவிடுங்கள் - நடை முறையை மட்டும் பாருங்கள். புதிய கல்விக் கொள்கை என்ற ஒன்றை, .தி.மு.. ஆட்சியினுடைய எஜமான னாக - கூட்டணிப் பங்காளியாக அல்ல என்பதை நன்றாக கவனியுங்கள் - .தி.மு..வினுடைய டில்லி எஜமானனாக - ஏனென்றால், .தி.மு.. என்பது முன்பு அதற்குப் பெயர்அண்ணா  திராவிட முன் னேற்றக் கழகம்; இப்போது அதற்குப் பெயர், அவர்களது நடைமுறைப்படி பார்த்தோமேயானால், அடகு வைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ்நாட்டை மட்டும் மீட்டெடுக்காது-.தி.மு..வையும் சேர்த்து மீட்டெடுக்கும்

எனவே, தமிழ்நாட்டை மட்டும் மீட்டெடுக்க மாட்டோம்; ஏப்ரல் 6  ஆம்தேதி  நீங்கள் உதய சூரியன் சின்னத்திலும், அதனுடைய கூட்டணி கட்சிகளுடைய சின்னத்திலும் பொத்தானை அழுத்தினால், அது தமிழ்நாட்டை மட்டும் மீட்டெடுக்காது நண்பர்களே, .தி.மு..வையும் சேர்த்து மீட்டெடுக்கும்.

எனவே, .தி.மு..மீது  யாருக்காவது அக் கறையுள்ள .தி.மு..வினர் இருந்தால், அவர் களும் உதயசூரியன் பொத்தானில் அழுத்தக் கூடிய கட்டாயம், அவசியம் தர்க்க ரீதியாக உண்டு. அவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு.

ஏனென்றால், அடகு வைக்கப்பட்ட பொருளை சில நேரங்களில் பலர் மீட்டெடுத்ததே கிடையாது. வட்டியிலேயே போய்விடும். அது போன்று, அங்கே அடக்குமுறையிலேயே போய்விட்டது. அதுபோன்று இருக்கக்கூடிய சூழ்நிலை.

ஏதோ இதை கற்பனையாக சொல்லவில்லை- அல்லது பேச்சுத் திறத்தினால் உங்களை வயப் படுத்துவதல்ல. ஆதாரப்பூர்வமாக சொல்கிறோம்.

சான்று ஒன்று,

புதிய கல்விக் கொள்கை என்று மோடி அரசு திணித்திருக்கிறதே - அந்த ஆபத்து உங்களுக்குத் தெரியவில்லை. கடைசி வீட்டில்தானே தீ எரிந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கலாம் - அந்தத் தீ பரவி விரைவில் உங்கள் வீட்டிற்கும் வரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

வாய்ப்பு கொடுத்தால், பெண்கள் ஆண்களுக்குக் குறைவானவர்கள் அல்ல!

1901 ஆம் ஆண்டில் நம்மவர்களில் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள் ஒரு சதவிகிதம். 100 இல் 99 பேருக்குத் தெரியாது. ஆனால், இன்றைக்கு 70 சதவிகித ஆண்கள்  படித்திருக்கிறார்கள். பெண்களில் 67 சதவிகிதம் பேர் படித்திருக்கறி£ர்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் இறுதித் தேர்வு முடிவில் பெண்கள்தான் அதிக சதவிகிதம் வாங்குகிறவர்கள். காரணம், வாய்ப்பு கொடுத்தால், பெண்கள் ஆண்களுக்குக் குறைவான வர்கள் அல்ல.

இன்றைக்கு அவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடந்ததே - எப்படி நடந்தது? பெரியார் என்ற மாபெரும் தத்துவத்தினுடைய வெளிச்சம் அல்லவா!

இன்றைக்கு எங்கே பார்த்தாலும் கல்லூரிகள் இருக் கின்றன; எங்கே பார்த்தாலும் பல்கலைக் கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நிறைய இருக் கின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு கிடை யாது; 100 ஆண்டுகளுக்கு முன்பு அறவே கிடையாது.

தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொண்டால், கும்பகோணம் காலேஜ், அரசினர் கல்லூரி எல்லாம் பார்ப்பனர்களுக்காகத்தான். இந்தக் கல்லூரியிலி ருந்துதான் வலங்கைமான் சாஸ்திரி போன்றவர்கள் எல்லாம் வந்தார்கள் என்று சொல்வார்கள்.

திருச்சி செயின்ட்ஜோசப் காலேஜ் - கிறித்தவர்கள் நடத்தியது. அதைவிட்டால் வேறு காலேஜ் கிடையாது.

மதுரை அமெரிக்கன் காலேஜ் - கிறித்தவர்கள் நடத்தியது.

பாளையங்கோட்டையில் காலேஜ் - கிறித்தவர்கள் நடத்தியது.

அரசு கல்லூரிகளே அன்று கிடையாது. அரசிடம் பணமே கிடையாது. இந்நிலையில், பதவிக்கு வந்த ராஜகோபாலாச்சாரியார், நம்முடைய மக்கள் ஏமாந்து போய், நீதிக்கட்சியை, திராவிட ஆட்சியை தோற் கடித்தார்கள்.  பெரியார் மேடை தவறாமல், சிறு பிள்ளைகளுக்குச் சொல்வதைப்போல சொன்னார். 1938 இல் 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களை மூடி, இரண்டாவது முறை 1953 இல்  6  ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளை மூடினார். எதற்காக? மனுதர்மத்தை அமல்படுத்துவதற்காக - சொன்ன காரணங்கள்,  நிதி யில்லை என்று சொன்னார்கள். மதுவிலக்கு வேண்டும் என்பதற்காக கல்வி பட்ஜெட்டை குறைக்கிறேன் என்று ராஜகோபாலாச்சாரியார் சொன்னார்.

ஏன் பெரியார் கொள்கைகளை

எல்லோரும் சுவாசிக்கிறார்கள்?

அன்றைக்கு இந்த நாட்டில் பெரியார்தான் கேட்டார் - இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் - பெரியார் எப்படி நமக்குப் போராயுதம்? பெரியாருடைய பணி என்ன? பெரியாரை ஏன் இன்றைக்கு நேசிக்கிறார்கள்? ஏன் பெரியார் கொள் கைகளை எல்லோரும் சுவாசிக்கிறார்கள்? அதனு டைய அடிப்படை என்ன? என்பதை எல்லோரும்  புரிந்துகொள்ளவேண்டும்.

பெரியார் கேட்டார், ஆச்சாரியார் அவர்களே, 1938 இல் பள்ளிக்கூடங்களை மூடினீர்கள் - கள்ளுக் கடைகளை மூடுகிறேன் - அதற்காக பள்ளிக்கூடங் களை மூடுகிறேன். ஏனென்றால், நிதி இல்லை என்று சொல்கிறீர்கள்.

‘‘ஆச்சாரியாரின்கள்'  ஒழிப்பு -

மது ஒழிப்பு என்பது

தமிழர்களின் கல்வி ஒழிப்பே!''

குடிஅரசு' பத்திரிகையில் அய்யா எழுதினார், ‘‘ஆச்சாரியாரின்கள்'   ஒழிப்பு - மது ஒழிப்பு என்பது தமிழர்களின் கல்வி ஒழிப்பே!'' என்று.  அய்யா சொன்ன பிறகுதான், எல்லோருக்கும் விளங்கியது.

ஏனென்றால், பார்ப்பனியம் எப்பொழுதும் தந்திரத்தோடு நடக்கக் கூடியது.

அவர்களைப் பொறுத்தவரையில்,  பார்ப் பனர்கள் எதையும் வெளிப்படையாக செய்ய மாட்டார்கள்.

தாசர்தம் தலைவா போற்றி,

தந்திர மூர்த்தி போற்றி, போற்றி !!

என்று அண்ணா எழுதினார்!

அதே முறையைத்தான் 1952 இல் பல்வேறு அரசியல் சூழ்நிலையால், ஆச்சாரியார் கொல்லைப்புறமாகப் பதவிக்கு வந்தபொழுது, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அரை நேரம் படிக்கவேண்டும் - அரை நேரம் அப்பன் தொழிலை செய்யவேண்டும்.

அதை எதிர்த்து அன்றைக்குப் போராடி, ஒழித்ததினால்தான், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் பொறியாளர்கள்; டாக்டர்கள்; வழக்குரைஞர்கள்.

குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால்....

அந்தக் குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், இத்தனை டாக்டர்களை நீங்கள் பார்த்திருக்க முடியுமா?

நீதிக்கட்சிக் காலத்தில், இங்கே நண்பர்கள் சுட்டிக் காட்டியதைப் போல, சமஸ்கிருதம் படித்திருந்தால் தான், மருத்துவப் படிப்பிற்கே மனு போட முடியும் என்று இருந்த நிலையை மாற்றியவர் பனகல் அரசர்.

பெரியார் போன்றவர்கள் போராடி, அந்த வெற்றி பெற்றோம். அதற்கடுத்து குலக்கல்வித் திட்டத்தின் ஆபத்து - அதனை எதிர்த்து அன்றைக்குப் போராடினார்கள். தஞ்சை மாவட்டம் - இந்த மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினத்திலிருந்துதான் மிகப்பெரிய அளவிற்கு பிரச்சாரக் களம்.

அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததினால் தான்,  இன்றைக்குப் பொறியாளர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், மற்ற மற்ற பட்டதாரிகள். அதே நிலை இப்பொழுது திரும்பிவிட்டது; அதைவிட ஆபத்தாக திரும்பிவிட்டது.

அன்றைக்காவது ஒரு மாநில அரசு; இன்றைக்கு மத்திய அரசு; மத்தியில் உள்ள அரசு மட்டுமல்ல - ஒரு எதேச்சதிகார  அரசு. எப்படியோ வித்தை காட்டி, ஏமாற்றி, மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து, ஆட்சிக்கு வரும்போது என்ன சொன்னார் மோடி?

‘‘சப்கோ சாத்; சப்கா விகாஸ்''

என்று சொல்லி ஏமாற்றினார்கள்!

கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்கள்; ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப் பேன் என்றார்.

வேலையில்லாமல் இருந்த அப்பாவி இளைஞர்கள் - பசியோடு இருப்பவர்களுக்கு எது கிடைத்தாலும் சாப்பிடலாம் என்று இருந்தவர்கள் உணவா? வேறு என்னவென்று தெரியாமல், ஏமாந்தார்கள்.

ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை; அய்ந்தாண்டு காலத்திற்குள் 10 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்.

அதற்குப் பெயர்தான் வளர்ச்சி, வளர்ச்சி என்றார். குஜராத் மாடல் என்றார். அதுவும் ஹிந்தியில் சொன்னார், ‘‘சப்கோ சாத்; சப்கா விகாஸ்'' என்றார்.

இப்பொழுது பார்த்தீர்களேயானால், ஏராளமான ஹிந்தி வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.

சப்கோ சாத், சப்கா விகாஸ் - மங்கி பாத் என் றெல்லாம் சொன்னார்; கடைசியாக என்ன நடந்தது. ஓராண்டிற்குள் 2 கோடி பேருக்கு வேலை?

கருப்புச் சட்டைக்காரன் -

காவலுக்குக் கெட்டிக்காரன் வேலை!

நீங்கள் வீட்டிற்குப் போங்கள்; அடுத்த நாள் காலை யில், வங்கியிலிருந்து தகவல் வரும்; உங்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போட்டிருப்பார்கள் என்றார்.

அதெல்லாம் மறந்து போயிற்று - பொதுமக்களின் மறதிதான் பா... கூட்டணிக்கு மிக முக்கியமாக இன்றைக்கு மூலதனமாக  இருந்துகொண்டிருக்கிறது. அந்த மறதியைக் கலைத்து, நினைவூட்டி, அவர் களுடைய கடமையைச் செய்யச் சொல்லுவதுதான்  எங்களைப் போன்ற கருப்புச் சட்டைக்காரன் - காவலுக்குக் கெட்டிக்காரன் வேலை.

2014 இல் வளர்ச்சி வளர்ச்சி என்று சொன்னவுடன், ஏமாந்து பொதுமக்கள் வாக்களித்தார்கள்.

அதற்கடுத்து, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வடநாட்டில் மதவெறி இருக்கிறது- அங்கே பெரியாரிய இயக்கம் இல்லை. சில வித்தைகளைப் பயன்படுத்தி, அடுத்ததாகவும் ஆட்சியில் வந்து அமர்ந்துவிட் டார்கள்.

முதலில் ஆட்சிக்கு வந்தபொழுது, இலை மறைவு, காய் மறைவாக செய்ததை, இன்றைக்கு வெளிப் படையாக செய்கிறார்கள்.

நீட்' நுழைவுத் தேர்வு ஊழலை ஒழிப்பதற்காம்!

இங்கே நம்முடைய கழகத் துணைத் தலைவர் சொன்னாரே, நீட் நுழைவுத் தேர்வு ஏன்? ஊழலை ஒழிப்பதற்காகவாம்.

மக்கள் என்ன முட்டாள்களா? நீட் தேர்வில்தானே எப்பொழுதும் இல்லாத ஊழல் நடைபெறுகிறது; ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். ஒருவர், இரண்டு பேர் அல்ல; நூற்றுக்கணக்கானோர்.

எல்லா மாநிலங்களிலும் இப்படி நடந்திருக்கிறதா? அல்லது இங்கே மட்டும்தான் நடந்திருக்கிறதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி கேட்டார்.

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுகிறார்கள் - பிறகு என்ன ஊழல் ஒழிப்பு?

கார்ப்பரேட்டுகளின் கொள்ளை - நுழைவுத் தேர்விற்காக பயிற்சி, பயிற்சி பயிற்சி என்று .

இந்தியா முழுக்க ஒரே தேர்வு - இதற்கு என்ன அர்த்தம்?

அரசமைப்புச் சட்டத்தில், எந்த இடத்தில் இந்தியா முழுவதும் ஒரே தேர்வு நடத்துவதற்கு அனுமதியளித் திருக்கிறது?

கிடையவே கிடையாது.

தேர்வு நடத்தவேண்டிய பொறுப்பு பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே உண்டு - இந்திய அரச மைப்புச் சட்டப்படி - கல்வித் துறை சட்டப்படி.

இந்தியா முழுக்க ஒரே தேர்வு நடத்தியதே சட்ட விரோதம்.

இங்கே இருக்கின்ற ஆட்சியை ஏன் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம்?

நீட் தேர்வை எல்லோருடனும் சேர்ந்து நாங்களும் எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு, மத்திய அரசி டம் அதை வலிமையாக சொல்ல முடியவில்லையே? வெட்கமாக இல்லையா உங்களுக்கு? எதைச் சாதித்தீர்கள் உங்களுடைய ஆட்சியில்?

நீட் தேர்வினால் எத்தனை அனிதாக்கள் உயிரிழந் திருக்கிறார்கள்; பெற்றோர் உயிர் இழந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நீட் தேர்வை ஒழிக்கவேண்டாமா?

தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு,  குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதே - அங்கே இருந்து திரும்பி வந்துவிட்டது என்பதையே மறைத்துவிட் டார்களே! இதுதான் இந்த ஆட்சியினுடைய யோக்கியதையா?  இதற்குத்தான் வாக்களிக்க வேண்டுமா? மக்களே நீங்கள்தான் கேட்கவேண்டும் - பெற்றோரே கேளுங்கள்!

அந்தப் பூனைக்குட்டி எப்பொழுது வெளியே வந்தது தெரியுமா? ஒரு வழக்கு விசாரணையின் பொழுதுதான் வெளியே வந்தது.

உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதி கேட்கும் பொழுதுதான், மத்திய அரசு வழக்குரைஞர் ‘‘அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன'' என்று சொன்னார்.

சட்டப்பேரவைக்கே தகவல் அளிக்கவில்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டனவே - அதற்கான காரணங்கள் சொல்லப்படவில்லை.

சரி, இங்கே இருக்கின்ற ஆட்சியாளர்கள் கேட்க வேண்டும் அல்லவா? எல்லாக் கட்சியினரும் ஆதரித்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக் கள்தானே அவை. நாங்கள் எல்லோரும் உங்க ளோடுதானே இருந்தோம். வரவேற்றோமே - எங்களுக்கு என்ன அரசியல் பார்வையா?

அம்மா ஆட்சியா? சும்மா ஆட்சியா?

மத்திய அரசை கேட்கக்கூடிய தெம்பு இருந்ததா? விதிவிலக்கே கொடுக்க முடியாது என்று ஒரு சட்டம் உண்டா?

அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்கி றார்களே, அம்மா ஆட்சியா? சும்மா ஆட்சியா?

இது அம்மா ஆட்சியாக இருந்திருந்தால், ஜெயலலிதா அம்மா என்ன செய்தார்கள்? ஓராண்டு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு வாங்கினார்களா? இல்லையா?

அந்த அம்மா இருந்திருந்தால், இந்த நிலைமை வருமா? என்று அவர்களே கேட் கிறார்கள்.

அதுமட்டுமல்ல, முட்டி முட்டி பார்த்தார் மோடி - உடனே அந்த அம்மா சொன்னார்கள்,  ‘‘லேடியா? மோடியா? என்று கேட்டார்.

நீங்கள் இப்பொழுது ஓடிப் போய், ‘‘மோடி எங்கள் டாடி'' என்று சொல்கிறீர்களே, நியாயமா?

அந்த அம்மையார் இருந்த இடத்திலிருந்தே நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு வாங்கினார்கள். உங் களால் முடியாதா? என்றால், முடியும். ஆனால், உங்கள் மடியில் இருக்கின்ற கனம் உங்களை இழுக்கிறது.                                            (தொடரும்)

Comments