‘திராவிடப் பொழில்’ - ஒரு வரலாற்றுப் பொன்னேடு

பேராசிரியர்

.காளிமுத்து

எம்.., பி.எச்.டி.,

இந்தியத் துணைக் கண்டத்தில் அரசியல் கட்சிகள் அமைப்புகள் பல தோன்றியுள்ளன. ஒவ்வோர் அமைப்பிற்கும் அதனதன் கொள்கைகளைப் பரப் புரை செய்வதற்காகப் பல தாளிகைகள் (பத்திரிகைகள்) இருந்தன. ஆனால் நடுநிலைப் பார்வையோடு, காய் தல் - உவத்தலின்றி ஆய்வுக்கண் கொண்டு கருத்துக் களை வெளிப்படுத்துவதற்கு எந்த அமைப்பிலும் ஆய்விதழ் ஏற்படுத்தப்படவில்லை.

திராவிட நாகரிகம் பரப்பிய இதழ்கள்

திராவிடர் இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. திராவிடர் இயக்கத்திற்கும்திரா விடன்’, Justiceஆந்திரப் பிரகாசிகா’, 'குடி அரசு', பகுத்தறிவு, Revolt,, திராவிட நாடு, புரட்சி, விடுதலை முதலான ஏடுகள் இருந்தன. இப்போது விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, முரசொலி முதலான இதழ்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன,

திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் காலத்தால் அழியாத கல்வெட்டுக்களைப் போல நிலைத்து நின்று மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து அவர்களுக் குப் பயன் தந்து கொண்டிருக்கின்றன. திராவிட நாகரிகம்-பண்பாடு மொழி - இவற்றின் உயர்தனிச் சிறப்பியல்புகளை அக்காலத்தில் சில இதழ்கள் பரப்பிவந்தன.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான, ‘தமிழ்ப் பொழில்என்ற இதழும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான செந்தமிழ் என்ற இதழும் தமிழரின் மேன்மையைப் பரப்பிவந்த ஏடுகளில் குறிப்பிடத் தக்கவையாகும். இவற்றில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வுலகில் பெரும் வர வேற்பைப் பெற்றன. இவை திராவிடர் இயக்க இதழ்கள் இல்லை என்றாலும் திராவிடர் இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளைப் பரப்புவதற்கு இவை ஒருபோதும் தயங்கவில்லை

புது வெளிச்சம் பாய்ச்சும்திராவிடப் பொழில்

ஒரு நூற்றாண்டுக் கால வரலாற்றில் திராவிடர் இயக்கம் நிகழ்த்திய சாதனைகளை, நடத்திய போராட் டங்களை பெற்ற வெற்றிகளை ஆவணப்படுத்தி நடுநிலையோடு ஆய்வு செய்வதற்கும், திராவிடர் நாகரிகம், கலை, பண்பாடு, இலக்கியங்கள் ஆகிய வற்றை ஆய்வு செய்வதற்கென்றும் ஓர் ஆய்விதழ் தேவை. இது காலத்தின் கட்டாயம் என்பதைத் தம் கருத்தில் கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்திராவிடப் பொழில்' என்னும் காலாண்டு ஆய்விதழைப் பல்கலைக் கழக வெளி யீடாகக் கொண்டு வந்துள்ளார்கள்.

2021 சனவரித் திங்களில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களோடுதிராவிடப் பொழிலை' ஆய்வுலகிற்கு அறிமுகப்படுத்தும் தமிழர் தலைவர், ‘ஆய்வுகள் விருப்பு வெறுப்பற்ற, அறிவியல் வழிப் பட்ட ஆய்வாக சரியான தரவுகளோடுபுது வெளிச் சத்தைப் பாய்ச்சக் கூடிய வகையில் அமையும். அமைய வேண்டும்' என்று தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார். திராவிட ஆய்வியலில் - தமிழ் ஆராய்ச்சித்துறையில்திராவிடப் பொழில்' ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் அய்ய மில்லை, பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல் கலைக்கழகத்தின் வேந்தர் ஆசிரியர் கி,வீரமணி அவர்களின் விழுமிய நோக்கத்தைத்திராவிடப் பொழில்' நிறைவேற்றும்.

திராவிடப் பொழிலின்தோற்றமே அதன் செல்வ நெறியை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள் ளது. மொகஞ்சதாரோ - அரப்பா அகழாய்வில் கண் டெடுக்கப்பட்ட பொருட்களும் தமிழகத்தின் கீழடி யில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத் தப்பட்டுள்ளன. இவை திராவிட நாகரிகத்தின் அடையாளச் சின்னங்கள்!

ஓர் ஆய்வுக் கட்டுரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தமிழர் தலைவர் - ஆசிரியர் அவர்களின் வாழ்த்துரை எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக வாழ்த்துரையில் அடிக்குறிப்புகள் அல்லது மேற்கோள்கள் இடம் பெறுவதில்லை, ஆனால் ஆசிரியரின் வாழ்த்துரையில் அய்ந்து மேற் கோள்கள் இடம் பெற்றுள்ளமை வாழ்த்துரைக்கு வரைவிலக்கணம் வகுப்பது போல் அமைந்துள்ளது. திராவிட ஆய்வியலின் முன்னோடிகளான டாக்டர் கால்டுவெல், டாக்டர் கில்பர்ட் சிலேட்டர், புரட்சிக் கவிஞர், நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.பால கிருஷ்ணன் ஆகியோர் கருத்துக்களை எடுத்துக் காட்டிப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்ற முறையில் - பொழிலின் புரவலர் என்ற முறையில் தமிழர் தலைவர் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துரை வழங்கு வோர்க்குப் புரவலர் ஆசிரியர் அவர்களின் வாழ்த் துரை வழிகாட்டு நெறியாக விளங்குகிறது.

தமிழ்ப் பெருமக்களின்வாழ்த்துப் பதிகங்கள்

சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்சாச்சா எபிலிங், ‘திராவிடப் பொழில், எனும் ஆய் விதழ் வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. அது காலங் களைக் கடந்து வருங்கால ஆய்வாளர்களுக்கு வழி காட்ட வேண்டும். ஆய்வுத் துறையில் உயர்ந்த ஆய்வு நெறிகளைப் பின்பற்றிப் பொழில் மணம் பரப்ப வேண்டும்என்று வாழ்த்துவதுதிராவிடப் பொழிலின்' தேவையை வற்புறுத்துவது போல் அமைந்துள்ளது.

முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராசனார் தம் வாழ்த்துரையில், ‘திராவிடப் பொழில்' என்பது காலத்துக்கு வேண்டிய கைவாள்; எழுச்சிக்கு வேண் டிய தூண்டுகோல், உலகுக்குத் திராவிடத்தை உணர்த் தப் பகுத்தறிவுப் பண்ணையில் மலரும் திராவிடப் பொழிலின் மணம் திசையெட்டும் பரவுமாக! ஆசிரி யர் தொடங்குவது எதுவும் வரலாற்றுக்கு வாழ்வு தருவதாகும், ‘இனமானத்துக்கு' உரமூட்டுவதாகும் என்று மனங்கனிந்து வாழ்த்துகிறார். பேராசிரியப் பெருந்தகைக்குத் திராவிடப் பொழிலின் சார்பில் வணக்கமும் நன்றியும்!

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தம் வாழ்த்துப் பதிகத்தில், ‘நூலோர் எல்லாம் மேலோர்' என்றும், தமிழர் கீழோர் என்றும், வந்தவர் வடமொழி யைத் தெய்வ மொழி என்றும், செந்தமிழ் மொழியை ஏவலர் மொழி’ என்றும், பார்ப்பனர் பரப்பிய பொய்யு ரையை ஒழிப்பதற்குப் பெரியார் நெறி யில் உழைத் திடும் சிறப்புறு நண்பர் பலரது நயத்தகு உழைப்பால் தோன்றியது “திராவிடப் பொழில்' என்று வாழ்த்து கிறார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தின் முதல் துணைவேந்தரும் சிறந்த பொருளியல் அறிஞரும், கல்வியாளருமாகிய டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரம் அவர்கள் தம் வாழ்த்துரையில், நாம் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாப் பணி களைச் சுட்டிக் காட்டுகிறார்,

‘Chancellor Dr K. Veerannani Desk' என்னும் தலைப்பில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் அரிய படைப்புகள் அனைத்தையும் தொகுத்துப் பதிவு செய்து காட்சிப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, பிரிட்டானியப் நாடாளுமன்றத்தில் ஆசிரியர் ஆற்றிய உரையையும், அதில் பதிவு செய்ய வேண்டும்' இவ்விரண்டு பணிகளையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்'. அருமைப்பாடு மிக்க இப்பணிகளைச் செய்க, என்று எமக்கு அறி வுரை நல்கிய பேராசிரியர் வேதகிரி சண்முகசுந்தரம் அவர்களுக்கு எமது இதயங்கனிந்த நன்றி.

திராவிடக் கல்வி ஆராய்ச்சியாளரும், சிறந்த தமிழறிஞருமாகிய டாக்டர் தொ.பரமசிவம் அவர்கள் அண்மையில் இயற்கை எய்தினார். திராவிட இயல், மாந்தவியல், தமிழியல், வரலாற்றியல் முதலான துறைகளில் சிறந்த ஆராய்ச்சியாளராக விளங்கியவர் அறிஞர் தொ.. அவர்கள். அவருடைய குன்றா நினைவுக்குத்திராவிடப் பொழில்' தனது இரங்கல் வணக்கத்தைச் செலுத்தி நினைவு கூர்ந்துள்ளது.

திராவிடப் பொழிலின் முதல் இதழில் தமிழில் மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

சங்க இலக்கிய ஆய்வு

டாக்டர் கண்ணபிரான் ரவிசங்கர் எழுதியுள்ள Dravidian Canvas in Sanga Tamil’  எனும் ஆய் வுக் கட்டுரை பண்டைத் தமிழ் மக்களின் அறிவார்ந்த சிந்தனைகளைச் சான்றுகளுடன் பட்டியலிடுகின்றது. இந்த நிலவுலகின் தோற்றத்தைப் பற்றி, இது எப்படி உருவாயிற்று என்பதைப் பற்றி, மதம் சார்ந்த கருத் துக்களே - மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களே பல மொழிகளிலும் நிலவி வருகின்றது. ஆனால் தமிழின் முதல் நூலாகிய தொல்காப்பியம், நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய அய்ந்து மூலக்கூறுகளும் கலந்த மயக்கம்' என்று கூறுவதை எடுத்துக் காட்டிப் பழந்தமிழரின் பகுத்தறிவு மனப்பான்மையைக் கட்டுரையாளர் ஆய்வு செய்கிறார், மேலும் தமிழர் நாகரிகப் பண் பாட்டு வரலாற்றில் ஆரிய திராவிடப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். ஆரியர் தமிழகத்திற்குள் உடுருவிய காலத்திலிருந்தே பார்ப்பன எதிர்ப்பு இருந்து வந்துள் ளது என்பதைச் சங்க இலககியச் சான்றுகளுடன் டாக்டர் கண்ணபிரான் ரவிசங்கர் நிறுவுகிறார். பெண் கல்வி சங்க காலத்தில் தடை செய்யப்படவில்லை. முப்பதிற்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்களின் படைப்புகள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை முதலான கோட்பாடுகள் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளமையை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறு சங்க இலக்கியங்கள் திராவிட நாகரிகத்தின் கொள்கலமாக விளங்குவதை ஆய்வாளர் டாக்டர் கண்ணபிரான் ரவிசங்கர் எடுத்துக் காட்டுகிறார். சங்க இலக்கியங்களை எவ்வாறு ஆராய வேண்டும் என்பதற்கு இக்கட்டுரை வழிகாட்டுகிறது.

இக்கட்டுரையின் ஆசிரியர் டாக்டர் கண்ண பிரான் ரவிசங்கர் பிரான்சில் உள்ள பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், ஒப்பியல் இலக்கியத்தில் (பெர்க்ளி பல்கலைக்கழகத்தில்) டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், இலக்கிய - இலக்கண வரலாறு, சமூகநீதி, மனிதநேய வரலாறு முதலான துறைகளில் வல்லுநர். இந்தோ - அய்ரோப் பிய மொழிகளிலும் சமற்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றவர், அறியப்படாத தமிழ்மொழி', ‘What is Tamil’, ‘Tamil or Sanskrit?' ‘Humanism and Dravidian Movement - A Success Story’  முதலான நூல்களின் ஆசிரியர், மிகச் சிறந்த ஆய் வாளர்.

(தொடரும்)

Comments