செய்தியும், சிந்தனையும்....!

தமிழ்நாட்டுக்கு வந்தால்

ஞானோதயம்?'

*          தமிழ், தமிழர் பண்பாட்டை பா..., பாதுகாக்கும்.

- ஜே.பி. நட்டா பா... தேசிய தலைவர் 

>>           முதலில் செம்மொழி நிறுவனத்தைப் பாதுகாக்க முன் வரட்டும், தினக்கூலிகளாக பணியாளர்களை நியமிப்பதைக் கைவிடட்டும்!

'உயிரை வாங்காதீர்!'

*         உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள்.

- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

>>           அதிமுக ஆட்சி மக்களின் உயிரை வாங்காமல் இருந்தால் போதாதா?

நாஸ்திகரம் வென்றது!

*           திருவெற்றியூர்  தியாகராஜசாமி கோயிலில் கரோனா தடுப்பூசி முகாம்.

>>           இதைவிட கடவுளை அவமதிக்கும் நாஸ்திகச் செயல் வேறு ஏது?

திராவிட இயக்கத்தின் தொட்டில்!

*           சவரத் தொழிலாளர் சங்கத்தினர் தி.மு.. கூட்டணிக்கு ஆதரவு.

>>           திராவிட இயக்கம் வளர்ந்த தொட்டிலே முடி திருத்துவோர் கடைகள்தானே.

தள்ளுபடி சீசன்!

*           அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அமைச்சர் வேலுமணி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

>>           ஆட்சியையே தள்ளுபடி செய்ய வெகு மக்கள் ஏற்கெனவே முடிவு செய்து விட்டார்களே!

சபாஷ், சரியான முடிவு

*          அதிமுக  - பாஜக கூட்டணியை முறியடிப்போம்!

- செ.கு. தமிழரசன், இந்தியக் குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர்

>>           டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட கட்சியல்லவா  - சரியான முடிவு!

இனப்போராட்டமே!

*           தி.. - கருப்பர் கூட்டம் - வி.சி.., - மே 17 இயக்கம் போன்ற ஹிந்து விரோத இயக்கங்களுக்கு திமுக - 'பி' டீம்.

- பா... செய்தி தொடர்பாளர்

>>           அட 'நாராயணா!' வேதம், இராமாயண காலத்திலிருந்து ஆரிய எதிர்ப்பாளர்களுக்குச் சூட்டிய பட்டம் அரக்கர்கள், அசுரர்கள், ராட்சதர்கள் என்பதுதானே - நடப்பதே ஆரிய  - திராவிடர் போராட்டம்தானே!

வியாபாரப் போட்டி!

*          தெலுங்கானாவில் பிரமாண்டம் - திருப்பதிக்குப் போட்டியாகக் கோயில்

- தினமலர் 25.3.2021 செய்தி

>>           'தினமலரே - போட்டிக் கோயில் என்கிறது. ஏற்கெனவே பக்தி என்பது ஒரு பிசினஸ் என்று சங்கராச்சாரியார் கூறியுள்ளார் -  புரிகிறதா?

Comments